கலரி உரையாடல் தா. சனாதனனுடன்: ‘ராசையாவை நினைவுகூறல்’
4 வெள்ளி, பி.ப. 6–பி.ப. 7 வரை
Register here
கலை வரலாற்றாசிரியர் மற்றும் கலைஞர் த. சனாதனன் தலைமை எடுத்தாளுணர் ஷர்மினி பெரேராவுடன் ஆசை இராசய்யாவின் ‘(வாழ்க்கை) கைவினைஞன்’ எனும் கலைப்படைப்பைப் பற்றி உரையாடுகிறார். இப் படைப்பானது 10 ஏப்ரல் 2022 வரை அருங்காட்சியகத்தின் முதல் சுற்றில் ‘சந்திப்புகள்’ இல் இடம்பெற்றிருக்கும்.
த. சனாதனன் யாழ் பல்கலைக்கழக நுண்கலை பீடத்தின் மூத்த விரிவுரையாளரும் கலைஞரும் ஆவார். கலை வரலாற்றில் முதுகலைப் பட்டத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டெல்லியிலிருந்து பெற்றுக்கொண்டுள்ளார். பல கட்டுரைகள் மற்றும் புத்தக அத்தியாயங்களை நவீன மற்றும் சமகால காட்சி கலையைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை காப்பகமான சமகால கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பின் துணை ஸ்தாபகர் ஆவார். அவரின் கலை உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து பணிபுரிந்து வருகிறார்.