அறிமுகம்

நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகமானது பொதுமக்கள், பாடசாலைகள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோருக்கு பயனும் நயமும் தரவென நவீன-சமகால கலைகளை காட்சிப்படுத்துவதிலும் ஆய்வுசெய்வதிலும் சேகரிப்பதிலும் பேணுதலிலும் ஈடுபாடுகொண்ட பொது அருங்காட்சியகம் ஒன்றினை நிறுவும் இலக்குடைய ஒரு கல்விசார் முன்னெடுப்பாகும்.

“ஒவ்வொரு பாடசாலை வருகையின் போதும் அருங்காட்சியகமானது ஆக்கபூர்வமான கற்றல் நிகழும் தளமாக உருமாறியதை கண்டபொழுது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுற்றோம். எங்களின் மும்மொழி செயல்திட்டத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆர்வமான கேள்விகளுக்கு பதில் அழிக்கவும் அவர்களுடன் உரையாடவும் திறமையுடைய  பயிற்சி பெற்ற உத்தியோகஸ்தர்கள் எம்மிடம் உள்ளனர்.”

— ருஹானி பெரேரா, கல்விக்கும் பொது நிகழ்ச்சிகளுக்குமான எடுத்தாளுநர்

Dec 2021 4

2016 இல், பொதுமக்களின் நன்மைக்காக நாட்டின் நவீன மற்றும் சமகால கலைகளை பார்க்கவும் பகிரவும் காக்கவுமான வெளியொன்றினை நிறுவும் பொது நோக்குடன், கலைஞர்களையும் அருங்காட்சியக நிபுணர்களையும் கலை வரலாற்றாளர்களையும் சேகரிப்பாளர்களையும் கலை ஆதரவாளர்களையும் உள்ளடக்கிய நிறுவுநர் குழு கூடியது. இலங்கையின் அருங்காட்சியகங்கள் நவீன மற்றும் சமகால கலைகளின் செழுமை மிகுந்த வரலாற்றினை தவிர்த்துவிட்டு இறந்தகாலத்துக்கு மட்டுமே சேவையாற்ற முயன்றன எனொஅதை அவர்கள் கண்டுணர்ந்தார்கள்.

நவீன, சமகால கலைகளின் காலப்பகுதிகளூடே கலை வடிவங்கள் மாற்றத்துக்கும் பெயர்ச்சிக்கும் உள்ளானதுபோன்று, எமது சமூகங்களும் அவர்தம் எதிர்பார்ப்புகளும் கூட மாற்றத்துக்கும் பெயர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளன. அவ்வாறே, இந்நாட்டின் அருங்காட்சியகங்களிடமிருந்து நாம் எதிர்பார்த்ததை விட அதிகமானவற்றை நாம் ஏற்று ஆதரிக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை நிறுவுனர் குழு அங்கீகரித்தது. அடிப்படையிலிருந்தே மீளச் சிந்திக்கவேண்டியதுதான் தேவையாயிருந்தது. அவ்வாறானதொரு அருங்காட்சியகம், எல்லா சமூகத்தினரையும் வரவேற்பதோடு மட்டுமல்லாமல், அதன் முடிவுகளிலும் செயற்பாடுகளிலும் அவர்கள் செயல்முனைப்போடு பங்களிக்கத்தக்க, கல்விக்கும் நயப்புக்குமான இடமாக இருக்கவேண்டிய தேவையுள்ளது.

Dec 2021 3

“அருங்காட்சியகத்தின் இலக்கானது எல்லோரையும் இயன்றவரை உள்ளடக்கக்கூடிய ஒரு தளமாக அமைவதே ஆகும். எங்களின் நோக்கமானது எவ் வகையான பாட்வாயாளாராக இருந்தாலும், மாணவர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என யாராகினும் எமது அருங்காட்சியத்திற்குள்ளே பிரவேசித்த நொடி முதல் வீடு செல்லும் வரை மறுபடி வருகை தர சிந்திக்க வைப்பதேயாகும்”

— ஷர்மினி பெரெய்ரா,முதன்மை எடுத்தாளுநர்

2019இல், இலாபநோக்கற்ற ஒரு நிறுவனமாக, நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகமானது நிறுவப்பட்டது. அருங்காட்சியகத்தின் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது:

இலங்கையிலும், பரந்த இப் பிராந்தியத்திலுமிருந்தான 20ம் 21ம் நூற்றாண்டின் கலை, வடிவமைப்பு, கைவினை, கட்டிடக்கலை, ஆற்றுகை, நிகழ்படம் போன்றவற்றின் மீது கவனம் குவித்து இயங்கும் காட்சிசார் பண்பாட்டுக்கான அருங்காட்சியகமாக இருத்தல்.

கலை, வடிவமைப்பு, கைவினை, ஆற்றுகை, கட்டிடக்கலை, நிகழ்படம் ஆகியவற்றை சேகரிப்பதும் பாதுகாத்தலும் பேணுதலும் காட்சிப்படுத்தலும் மீட்டமைத்தலும் பொருள்கோடலும்.

கல்வி சார்ந்ததும் பொருள்விளக்கத்துக்குரியதுமான விடயங்களை ஆய்வு செய்தல், ஆக்கப் பொறுப்பெடுத்தல், விநியோகித்தல். இவற்றுடன் உரையாடலுக்கான களத்தினை வழங்குதல்.

கலை, வடிவமைப்பு, கைவினை, கட்டிடக்கலை, ஆற்றுகை, நிகழ்படம் ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஒரு பொது வெளியைப்பற்றிய பொதுமக்களின் புரிதலையும் மதிப்பீட்டினையும் நயப்பினையும் வளர்த்தெடுத்தலும் ஊக்குவித்தலும்

இயங்கும் பொது வெளி என்ற அடிப்படையில் திட்டமிடல், வடிவமைத்தல், உருவாக்குதல், நடத்துதல், முகாமை செய்தல், பராமரித்தல். அருங்காட்சியகத்தை கவனித்துக்கொள்வதற்கான ஏனைய விடயங்களை செய்தல்.

அருங்காட்சியகத்தின் இலக்குகளோடு முரணற்ற வகையில் பரிசுகள், நன்கொடைகள், அனுசரணைகள் போன்றவற்றை கோருதலும் பெறலும்.

ஒத்த தொழிற்துறைகளுடன் பணியாற்றும் அல்லது அருங்காட்சியகத்த்தின் இலக்குகளோடு ஒத்துப்போகும் எந்தவொரு அமைப்புனோ அல்லது நிறுவனத்துடனோ கூட்டிணைதல்.

“மிக சுவாரஸ்யமான வருகைகளாக உருமாறிய தருணங்கள் என்னவென்றால் ஆசிரியர்கள் எமது எடுத்தாளுநர்களோடு ஒன்று சேர்ந்து மாறுபட்ட வகுப்பறையை அருங்காட்சியகத்தில் கலை மற்றும் கைத்தொழில் நிகழ்ச்சிக்கு பின்னர் அமைத்தது மற்றும் கலைப்படைப்புகளையொட்டிய வகுப்பறை செயல்திட்டங்களை உருவாக்கியமையே ஆகும்.”

— ருஹானி பெரேரா, கல்விக்கும் பொது நிகழ்ச்சிகளுக்குமான எடுத்தாளுநர்

Dec 2021 7

அமைவிடம்

நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகமானது இலங்கையை தளமாகக் கொண்டது. தற்போது அது நிலையான அமைவிடம் ஒன்று இல்லாமல் உள்ளூர் மட்டத்தில் இயங்கி வருகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு செயற்திட்டத்துக்கும் ஒவ்வொரு இடம் என்ற வகையில் வெவ்வேறு இடங்களை எம் அருங்காட்சியகம் அமைவிடமாய்க் கொள்ளும்.

Dec 2021 6

“எமது நோக்கமானது அருங்காட்சியகமொன்றை அமைப்பது மட்டுமின்றி அருங்காட்சிக்கு செல்லும் பொதுமக்களை ஊக்கப்படுத்துவதுமே ஆகும்.”

— அஜித் குணவர்தன (தலைவர்), புளூஸ்டோன் கப்பிடல் நிறுவுநரும் CEOவும்

சேகரம்

பொதுமக்களுக்கு அணுகத்தக்க கலைச் சேகரம் ஒன்றினை உருவாக்கவேண்டிய அவசரத் தேவையை நவீன மற்றும் சமகால கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகம் உணர்கிறது. கலை, வடிவமைப்பு, கைவினை, கட்டிடக்கலை, ஆற்றுகை, நிகழ்படம் ஆகியவை தொடர்பான சேகரிப்புக்களை உருவாக்கும் எமது நீண்டகால ஈடுபாட்டுக்கான அடித்தளத்தினை தயார்படுத்துவதற்கே நாம் முன்னுரிமையளிக்கிறோம். இச் சேகரிப்பினை, அருங்காட்சியகத்தின் நீண்டகால இலக்குகளோடு நீடித்து நிலைக்கக்கூடியதாக, அவ் இலக்குகளுக்கென வடிவமைக்கப்பட்டதாக, உருவாக்கும் வேலைத்திட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சேகரிப்பினை அட்டவணைப்படுத்தலும் வரைபடமிடலும், திறன் மேம்பாடு, சேகரிப்பின் வளர்ச்சி இலக்குகளின் ஒத்திசைவாக்கம் ஆகியவற்றை இது உள்ளடக்குகிறது.

“பார்வையாளர்களை கேள்வி கேட்க ஊக்கப்படுத்துவது மற்றும் அவர்களின் துறை சார்ந்த கண்ணோட்டத்துடன் கலைப்படைப்புகளை பார்வையிட்டு அவர்களின் கருத்தை கூற ஒரு வெளியை நாம் எமது அருங்காட்சியகத்தில் உருவாக்கியுள்ளோம். இவ்வாறான உரையாடல்கள் பல புதிய எண்ணக்கருத்துகளை உருவாக்கியுள்ளதை நாம் காண்கிறோம்.”

— சந்தேவ் ஹன்டி, எடுத்தாளுநர்

Dec 2021 5

அணியினர்

நவீன மற்றும் சமகால கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகம் , அர்ப்பணிப்புக்கொண்ட தொழில்நெறிஞர்கள், பணிக் கல்வி வெறுபவர்கள், பயிற்சியாளர்களை ஊழியர்களாகக் கொண்டிருக்கிறது.

ஷர்மினி பெரேரா
முதன்மை எடுத்தாளுநர்

சந்தேவ் ஹன்டி
சிரேஷ்ட எடுத்தாளுநர்

தினால் சஜீவ
உதவி எடுத்தாளுநர்

மினெலி கருணாரத்ன
கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர்

மல்ஷானி டெல்கஹபிட்டிய
தொழிற்பாட்டுத் தலைவ

தாரிக் தாஹிரீன்
கலைக்கூட முகாமையாளர்

ஒனெல்லா பெரேரா
அபிவிருத்தி உதவியாளர்

கௌமதீ ஜயவீர
தலையங்க உதவியாளர்

துமேஷா விமலசிறி
சமூக ஊடகங்கள் மற்றும் இணையதள முகாமையாளர்

சுந்தரலிங்கம் ரம்யா
நிதி, நிர்வாகம், மற்றும் MEL இணைப்பாள

அமலினி டி சேரா
திட்ட மேலாளர்

அருங்காட்சியக குழு

சன்ன தஸ்வத்த
MICD Associates பங்காளர்

அப்பஸ் ஏசுஃபலி
குழு இயக்குநர், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் PLC

அஜித் குணவர்தன (தலைவர்)
புளூஸ்டோன் கப்பிடல் நிறுவுநரும் CEOவும்

கலாநிதி சுஜாதா மீகம
சிங்கப்பூர் நங்க்யாங் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் கலை, வடிவமைப்பு ஊடக கலாசாலையின் உதவிப் பேராசிரியர்.

ரண்மாலி மிர்சந்தனி
South Asia, Royal Academy of Dance UK தேசிய முகாமையாளர், Gratiaen Trustee, Governing Board, Symphony Orchestra of Sri Lanka

சுகன்யா ரஃபேல்
M+, West Kowloon Cultural District, Hong Kong நிறைவேற்று இயக்குநர்

மைக்கேல் ஸ்னெலிங்
கலைஞர், எடுத்தாளுநர், சிட்னி தேசிய கலைக் கலாசாலையின் முன்னாள் இயக்குநர்.

நதீஜா தம்பையா
Head of Legal, Secretarial and CSR at John Keells Holding PLC

ஜோன் விக்கிரமரத்ன
உதவி இயக்குநர், Museum Operations (CFO), M+, West Kowloon District, Hong Kong

ஜெகத் வீரசிங்க
கலைஞர் (நிறுவுனர் குழு)

எமக்கு உதவுக

நவீன மற்றும் சமகால கலைகளுக்கான இலங்கையின் முதல் அருங்காட்சியகத்தினை உருவாக்க எம்முடன் இணையுங்கள்

உறுப்பினராக இணைவதன் மூலமோ அல்லது எமதுசெயற்பாடுகளுக்கு நன்கொடை அளிப்பதன் மூலமோ இம்முயற்சியில் ஈடுபட உங்களை அழைக்கிறது நவீன மற்றும் சமகால கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகம்

எம்முடன் இணைக