எமக்கு உதவுக

நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகத்துக்கு உதவிட தாங்கள் காட்டும் ஆர்வத்துக்கு மிகவும் நன்றி.

நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்காகவென்றே அர்ப்பணிப்புடன் இயங்கும் இலங்கையின் முதலாவது பொதுமக்கள் அருங்காட்சியகத்தினை கட்டியெழுப்ப உங்கள் ஆதரவு எமக்கு உதவுகிறது. நாம் எமது இலக்குகளை அடைவதற்கு நீங்கள் ஏராளமான வழிகளில் உதவிட முடியும். எம்மோடு பங்காளராகுங்கள், ஈடுபாடுகொள்ளுங்கள், வளர்ந்துவரும் எமது அணியுடன் இணையுங்கள்.. நீங்கள் தேடி வந்த தகவல் இங்கே இல்லையெனில் எமக்கு ஒரு வரி எழுதி அனுப்புங்கள்.

தன்னார்வலர்

Dec 2021 2

இப்பணியில் எம்மோடு கைகோர்த்துக்கொள்ள உங்களுக்கு நேரமிருந்தால், உங்களைத் தொடர்புகொள்ள நாம் விரும்புகிறோம். பல்வேறு செயற்பாடுகளிலும் எமக்கு உதவிட, தன்னார்வலர்களை நாம் தேடுகிறோம்.

வயது, அனுபவம் என்பவற்றை எல்லாம் பொருட்படுத்தவேண்டியதில்லை. ஒருவாரத்தில் சில மணிநேரங்களையோ அல்லது குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியையோ உங்களுக்கு ஒதுக்க முடியுமானால், தன்னார்வப் பங்களிப்பை வழங்க விருப்பமென்றால், எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.

நன்கொடையளிக்க

நீங்கள் எங்கே போனாலும் எமக்கான உங்கள் ஆதரவை வழங்குங்கள்.. உங்கள் நன்கொடைக்கு ஈடாக, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியக தூக்குப் பை ஒன்றினை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

தொகையைத் தெரிவு செய்யவும் :

LKR 3,000 (தூக்குப் பை ஒன்றினைப் பெற்றுக்கொள்வீர்கள்)

LKR 5,000 (இரண்டு தூக்குப் பைகளை பெற்றுக்கொள்வீர்கள்)

LKR 

நன்கொடையளிக்க

வணிக அனுசரணை

Dec 2021 8-01

நாம் வழங்கும் கண்காட்சி ஒன்றிற்கோ நிகழ்ச்சி ஒன்றிற்கோ அனுசரணை வழங்க விருப்பமாயின், எமக்கு தெரியப்படுத்துங்கள்.. உங்கள் வணிகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் இதில் ஈடுபட உங்களுக்கு ஆர்வம் இருந்தாலோ, அவ்வாறான ஒன்றைஅமைத்துக்கொள்ள விரும்பினாலோ அதற்கு எம்மால் உங்களுக்கு உதவ முடியும். எம்மை தொடர்புகொள்ளுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது நன்கொடை எவ்வாறு பயன்படுத்தப்படும்?

ஒரு அருங்காட்சியகத்தின் ஈடுபாட்டுடனான உட்கட்டுமானத்தினை உருவாக்கவும் கண்காட்சிகளுடைய ஊக்கம்தரும் நிகழ்ச்சிகளை நடத்தவும் சிங்கள தமிழ் ஆங்கிலமொழிகளில் கற்றல் செயற்பாடுகளை வழிநடத்தவும் தேவையான திறன்கள், அறிவு, அனுபவம் கொண்ட தொழில்நெறிஞர்களின் அணியொன்றை பணிக்கமர்த்த எல்லா நன்கொடைகளும் பயன்படுத்தப்படும்.

நான் அளிக்கக்கூடிய நன்கொடையின் மட்டம் என்ன?

நாம் எல்லா மட்டங்களிலுமான நன்கொடைகளை எதிர்பார்க்கின்றோம். கல்வித்திட்ட மேம்பாடு, கலை சார் அட்டவணைப்படுத்தல், எடுத்தாளுகை பயிற்சி முதல் ஆசிரியர் பயிற்சி, நாட்டின் கலை, கட்டிடக்கலை, வடிவமைப்பு வரலாறுகள் பற்றிய ஆவண ஆய்வுகள் வரையான செயற்திட்டங்களுடன், நாட்டின் முதலாவது நவீன கலை அருங்காட்சியகம் ஒன்றினை நிறுவுவதற்கு அவசியமான செயற்பாடுகளுக்கும் உதவுவதில் எல்லா நன்கொடைகளும் இணைந்து பங்கெடுக்கும்.

எவ்வாறு எனது நன்கொடை அங்கீகரிக்கப்படும்?

எல்லா நன்கொடைகளும் ஆதரவாளர் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழோ அல்லது நிறுவனர் வட்டத்தின் ஊடாகவோ அங்கீகரிக்கப்படும். அடையாளம் காட்டாத நன்கொடையாளராக நீங்கள் இருக்க விரும்பினால், அவ்வாறே உங்கள் நன்கொடையினை ஏற்றுக்கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

எனது பணம் பொறுப்புடன் செல்விடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள என்ன வகையான கட்டுப்பாடுகள் உள்ளன?

நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகம் இலாப நோக்கற்ற நிறுவனமாக இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து நிதியும் நன்கொடைகளும் கடுமையான கணக்காய்வு நடைமுறைகளுக்கு உட்பட்டவை.