ஸ்பாட்லைட்
W. J. G. Beling (1907–1992)
30–33—Untitled (c. 1930s)
Digital prints reprinted from silver gelatin prints
Beling Family Collection, Colombo
முதன்முதலில் ‘ஒரு இலட்சம் சிறிய கலதககளிலன’, டாக்கா கலை உச்சி மாநாடு 2018, பங்களாதேஷில் காட்சிப்படுத்தப்பட்டது
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1943 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கையின் முதலாவது நவீனத்துவ இணைவாகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட நவீன கலைஞர்களின் தொகுப்பான ’43 குழுவின் ஸ்தாபக உறுப்பினர்களில் டபிள்யூ. ஜே. ஜி. பீலிங் ஒருவராகும். குறிப்பாக புகைப்பட அச்சிடும் நுட்பங்களுடன் பரிசோதனை தொடங்கிய நேரத்தில் அரிதாகவே ஆரம்பித்த இந்த நான்கு புகைப்படங்களும் புகைப்படம் எடுப்பதில் பீலிங்கிற்கிருந்த ஆர்வத்திற்கு ஒரு தனித்துவமான பார்வையை வழங்குகின்றன. ஒரு சக புகைப்படக் கலைஞரான லயனல் வென்ட்டின் (1900–1944) மெய்யுருவப்படம், மற்றும் கலைஞரின் அத்தை எத்தேல் ஸ்வானின் மெய்யுருவப்படம் (சி .1890 கள் –1980) ஆகியவை இப்புகைப்படங்களில் அடங்கும். வென்ட் மற்றும் ஸ்வானின் மெய்யுருவப்படங்களை ஒன்றன் மேல் வைத்துப் பதிப்பித்து பீலிங் மூன்றாவது புகைப்படத்தை உருவாக்குகிறார். இவ்வாறு ஒருங்கிணைக்கபட்ட உருவங்களின் காட்சி விளைவானது பேய் போன்று தோன்றுகிறது. வேண்டுமென்றே விளையாட்டுத்தனமாக இருப்பதை விட, புகைப்படத்தை விரிவுறுத்தக்கதாக்கி யதார்த்தத்தை மாற்றியமைப்பதற்கான பீலிங்கின் ஆர்வத்தையும் புகைப்படங்கள் காட்டுகிறது. அத்தகைய ஆர்வம் பீலிங்கின் சுய மெய்யுருவில் உள்ளது, அங்கு அவர் ஒரு கண்ணாடியின் முன் பிரதிபலிப்பாகக் காணப்படுகிறார், அவரது தலை கீழ்நோக்கி அவரது வோய்க்ட்லேண்டர் இரட்டை-லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமராவின் வ்யூபைண்டரினைப் பார்க்கிறார். ஒரு சிறுவன் தூரத்தில் நிற்கிறான் – அவன் கண்கள் பார்ப்பவரின் உற்றுநோக்கலைச் சந்திக்கின்றன ஒளி மீட்டராகத் எது தோன்றுவதோ அதைப் பிடித்துக் கொள்கின்றன.