இசை நிகழ்ச்சி: பறவைப் பாடல்கள் சுரேகா அமரசிங்க, டினெல்க லியனகே, யொஹான் பீரிஸ் மற்றும் சஹன் சமரகோன் ஆகியோருடன், செல்வாக்கு கொண்ட பாரம்பரிய இசை மற்றும் மின்னிசை நிகழ்வு
நவம்பர் 4 வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இரண்டாவது சுழற்சியின் காட்சி 2 இல் உள்ள கலைப்படைப்புகளுக்கு, சுரேகா, யொஹான் மற்றும் சஹன் புல்லாங்குழலுடனும், டினெல்க மின்னிசையுடனும் தமது உள்ளுணர்ச்சியை வெளிக்காட்டுவர். இக்காட்சியானது, காமினி ரத்னவீர (பி. 1949) என்பவர் நிறுவிய பாரிய அளவிலான பறவை ஓவியங்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்பறவை ஓவியங்கள் முதலில் ஹபரண லாட்ஜ் (சினமன் லாட்ஜ் ஹபரண) என்ற விடுமுறை விடுதிக்காக நியமிக்கப்பட்டிருந்தன. இந்த கலைப்படைப்புகள், லக்கி சேனநாயக்க (1937-2021) வரைந்த கந்தளம விடுமுறை விடுதியின் (ஹெரிடன்ஸ் கந்தளம ஹோட்டல்) தளத் திட்டத்துடன் உரையாடலில் வைக்கப்பட்டுள்ளன. ரத்னவீர மற்றும் சேனநாயக்கவின் படைப்புகளை, நவம்பர் மாதம் 13ம் திகதி (2022) வரை ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் பார்வையிடலாம்.