இலங்கையின் சமகால காணொளி படைப்புகள் மற்றும் தேர்ந்த குழுவுடன் கலந்துரையாடல்
2 ஒக்டோபர் 2023 வியாழக்கிழமை அன்று,
மாலை 6:30 மணிக்கு
The Photographers’ Gallery
16–18 ரமில்லீஸ் தெரு, லண்டன்
இலங்கையின் சமகால கலைஞர்களின் காணொளிப் படைப்புகள் மூலம் அந்நியத்துவம் என்னும் சிக்கலான விடயத்தை எடுத்துக்காட்டும் திரையிடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் நிறைந்த மாலைப் பொழுதில் கலந்துகொள்ள இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்துடன் (MMCA இலங்கை) இணையுங்கள்.
The Photographers’ Gallery உடன் இணைந்து வழங்கப்படும் இந்த காணொளி காட்சிப்படுத்தல் மற்றும் தேர்ந்த குழுவுடனான கலந்துரையாடல்கள், கொழும்பில் அமைந்துள்ள MMCA இலங்கையில் தற்போது நடைபெறும் ‘அந்நியர்’ கண்காட்சியில் காண்பிக்கப்படும் பல காணொளிப் படைப்புகளை எடுத்துக் காட்டும்.
டினெல்க லியனகே
ஹனியா லுதுஃபி
இமாத் மஜீத்
நீனா மங்களநாயகம்
சுமுதி சுரவீர
ஆகியோரின் காணொளிப் படைப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன
அதனைத் தொடர்ந்து, ஹமாத் நாசர் MBE நடுவராக இருந்து நடத்தும் கலந்துரையாடலில் பின்வரும் கலைஞர் பங்கேற்பர்:
நீனா மங்களநாயகம்
ரெஜினோல்ட் எஸ். அலோய்சியஸ்
சந்தேவ் ஹன்டி (எடுத்தாளுனர்)
ஷாமினி பெரேரா (தலைமை எடுத்தாளுனர்)
ஆகியோருடன்
அதனைத் தொடர்ந்து குடிபானம் வழங்கப்படும்.