பயிற்சிப்பட்டறை ருவன் மீகம்மான ‘கட்டிக்கலை புகைப்படம்’ (18 வயதிற்கு மேற்பட்டோர்)
மார்ச் 16 சனிக்கிழமை, பி.ப 3–6 வரை
ருவன் உடன் இணைந்து நகர்ப்புற கட்டிடக்கலை மற்றும் நிலஅமைப்பை புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள். பயிற்சிப்பட்டறை அருங்காட்சியகத்தில் ஆரம்பித்து காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த இடங்களுக்கு செல்லும். பங்கேற்ப்பாளர்கள் செயல்படக்கூடிய கேமரா உள்ள அவர்களின் சொந்த தொலைபேசி அல்லது டேப்பை கொண்டு வரவேண்டும். இப் பயிற்சிப்பட்டறை பெரும்பாலும் சிங்களத்தில் நடாத்தப்படும்.
இப் பயிற்சிப்பட்டறையானது ’88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வட்டபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது. இக் கண்காட்சி ஜூலை 7, 2024 வரை காட்சியில் இருக்கும். கேமராவைத் தவிர மற்றைய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.