வாசிப்பு குழு: தாரிக் ஜசீலுடன் ‘மினெட் டி சில்வா மற்றும் கட்டடக்கலை வழிமுறை’
மே 31 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7.30
கலைஞரும் கல்வியாளருமான இருஷி மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக இருக்கும் ருஹாணி ஆகியோர் மினெட் டி சில்வாவின் சுய-விவரணமாக்கல் பற்றிய கலந்துரையாடலை முன்னெடுப்பார்கள். அத்துடன் மினெட் பற்றியும் அவரது பணி பற்றியும் ஏனைய படைப்பாளிகள் எவ் வழிகளில் நினைவு கூருகிறார்கள்/கற்பனை செய்கிறார்கள் என்பது குறித்தும் அவர்கள் கலந்துரையாடுவார்கள். தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களில் ‘88 ஏக்கர்கள்’ ல் காட்சிப்படுத்தப்பட்ட இருஷியின் லோனா ரைட் பொம்மை, ‘is this an architectural documentary?’ (2023) மற்றும் ஷிரோமி பின்ற்றோவின் ‘Plastic Emotions’ லிருந்து தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் உள்ளடங்கும்.
வாசிப்புக் குழுவிற்கு பதிவு செய்தவுடன், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் இந்த நூல்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், வாசிப்பு குழுவில் கலந்துகொள்வதற்கு முன் அவற்றை வாசிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் வாசிப்பு குழு தொகுக்கப்பட்டுள்ளது.