கேலரி உரையாடல்: இருஷி தென்னக்கோன், அனோமா ராஜகருணா, மற்றும் ஷானி ஜயவர்தன உடன் ‘ஆவணப்படம் தயாரிக்கும் கலை?’
ஜூலை 5 வெள்ளிக்கிழமை, பி.ப 6–7வரை
‘88 ஏக்கர்கள்’ குறித்த இந்த இறுதி கலரிக் கலந்துரையாடலில் கலைஞரும் கல்வியாளருமான இருஷி கதை கூறல் மற்றும் ஆவணம் தயாரித்தலில் பெண்ணிய அணுகுமுறைகள் குறித்து விவரணப்படத் தயாரிப்பாளர்கள் அனோமா மற்றும் ஷானிவுடன் பேசுவார். அதில் அனோமா ‘Women Who Loved Women in Sri Lanka’ (2010), மற்றும் ‘Our Mother, Grandmother, Prime-minister: Sirimavo’ (2023)ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்துவார். அதேவேளை ஷானி அவர்கள் ‘Being Here’ (2023) மற்றும் ‘The Wronged Right’ (2018) போன்றவை பற்றிப் பேசுவார்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் வழங்கப்படுகிறது.