‘இரண்டு யன்னல்களின் கதை’
எங்கள் உதவி எடுத்தாளுனர், சந்தீவ் ஹேண்டி, ‘ஒரு நூறாயிரம் சிறிய கதைகள்’ கண்காட்சியின் பகுதியாக இருந்த ஓவியங்களில் இரண்டு எடுத்துக்காட்டுகளினைப் பயன்படுத்தி ஒரு செயற்பாட்டை அமைத்துக்கொள்கிறார்.
The title of this artwork is ‘View from Layards Road House Window’.
It was made in 1969 by the artist W. J. G. Beling (1907–1992).
This work is made with wax crayons on paper. See the full caption
(1)“W.J.G Beling 43 குழுவின் முதல் உறுப்பினர்களில் ஒருவரும், மிகமுக்கியமான இலங்கைக் கலைஞருமாகும். 1969 ஆம் ஆண்டில் அவர்வரைந்த ‘View from Layards Road House Window’ ஓவியமானது, ஒரு வீட்டின் அவரது ஸ்ரூடியோ ஜன்னலிலிருந்து அவரது நண்பரும் கலைஞருமான ஆப்ரி கோலெட்டிற்கு சொந்தமான வீதியினைப் பார்க்கும் காட்சியைக் காட்டுகிறது. இந்த ஓவியத்தினை வரைந்த போது அவரது நண்பர் இந்த வீட்டில் வசிக்கவில்லை ஏனெனில் கொலெட் தனது அரசியல் கார்ட்டூன்களால் 1961 ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.”
The title of this artwork is ‘Nightscapes’.
It was made in 1999 by the artist Muhanned Cader (b. 1966).
This work is made with oil paints on a board. Click to see the full caption
(2) “1999 ஆம் ஆண்டில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, முஹனட் காடர் ”Nightscapes’ என்ற 40 ஓவியங்களை போல்கோடா(Bolgoda) ஆற்றின் அருகிலுள்ள தனது ஸ்ரூடியோவில் இருந்து உருவாக்கினார். இந்த ஓவியங்கள் இலங்கை வரலாற்றில் ஒரு இருண்ட காலமாக இருந்த உள்நாட்டு யுத்தக் காலப்பகுதியில் செய்யப்பட்டன. கலைஞரின் கூற்றுப்படி, அந்த கோரலவெல்லா(Koralawella) இரவுகள் ஏதோவொன்றைப் பற்றியதாக இருந்தது, அது சரியானதும், மர்மமானதும், இது அவரினை அவற்றை ஓவியமாக்க வைத்தது. நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை இரவில் அந்த நதி அவருக்கு நினைவூட்டியது”
(3) இரண்டு கலைஞர்களும் பல ஆண்டுகள் இடைவெளியில், வெளிப்புறமாகப் பார்க்கிறார்கள், தங்கள் சொந்த ஸ்ரூடியோக்களுக்குள் இருந்து தனித்துவமான வரலாற்று தருணங்களினை ஓவியமாக்கியுள்ளனர். உங்கள் சொந்த ஜன்னலிலிருந்து வெளியே பார்த்து, நீங்கள் இன்று என்ன வரைவீர்கள்?
குறிக்கோள்கள்
– இரண்டு கலைப்படைப்புகளையும் அவற்றுடன் தொடர்புபட்ட கதைகளையும் என்னால் ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்க்கமுடியும்
– இந்தக் கதைகளுக்கு பதிலளிக்கும் விதமாக எனது சொந்தக் கலைப்படைப்பை என்னால் உருவாக்க முடியும்
படிமுறை 1
இந்த இரண்டு கலைப்படைப்புகளையும் பாருங்கள். அவற்றின் பின்னால் உள்ள கதைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
படிமுறை 2
இரண்டு பட்டியல்களை உருவாக்குங்கள் முதலில், இரண்டு கலைப்படைப்புகளுக்கும் அவற்றின் கதைகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளைப் பட்டியலிடுங்கள். பின்னர், இரண்டிலும் என்ன வேறுபாடுகள் உள்ளன என்பதைப் பட்டியலிடுங்கள்.
படிமுறை 3
உங்கள் வீட்டில் ஒரு யன்னலைத் தேர்ந்தெடுத்து, அதன் வழி வெளியே நீங்கள் பார்ப்பதை வரையவும் அல்லது ஓவியமாக்கவும்.