‘நம் மனதினால் உலகைப் பார்த்தல்’ பார்த்தல்’
Download this worksheet as a pdf
சிந்தனைப் பெட்டி
ஒரு நாய் இந்த உலகத்தை எவ்வாறு பார்க்கும் என நீங்கள் சிந்தித்ததுண்டா? உங்களுடைய பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்கள் இந்த உலகத்தை எவ்வாறு பார்ப்பார்கள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? அவை வேறுபட்டதாக இருக்குமா – ஆம், நீங்கள் பார்ப்பதை விட முற்றிலும் வேறுபட்டதாய் இருக்குமா ? நாங்கள் அவர்களுடைய மூளைக்குள் சென்று நிச்சயமாக அறிந்துகொள்ள முடியுமா? எங்களால் அவ்வாறு செய்ய முடியாது என்பதே எளிமையான பதிலாகும்!
நாங்கள் இந்த உலகத்தை பார்ப்பது பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது, அவையாவன: எங்களுடைய கண்கள் எவ்வாறு வேலைசெய்கின்றன, எங்களுடைய மூளை எவ்வாறு தொழிற்படுகின்றது மற்றும் எங்களுடைய மனம் எவ்வாறு அனைத்து தகவல்களையும் உள்வாங்கிக்கொள்கின்றது என்பனவாகும்.
சிந்தியுங்கள்!
மூளையும் மனமும் ஒன்றா? அழகற்ற ஆனால் கண்கவரக்கூடிய குமிழ் வடிவத்திலுள்ள மூளையைப் பற்றி நாங்கள் விஞ்ஞான வகுப்பில் அறிந்து கொள்ளலாம். நாங்கள் அனைவரும் எவ்வாறு சந்தோஷம், துக்கம், அன்பு அல்லது கோவம் எனும் உணர்வுகளை எங்கள் மனதிற்குள் உணர்வோம் என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்துகொள்வது மிகவும் கடினமாகும். இந்த விசித்திரமான விழித்திருத்தல் நிலை அல்லது பிரக்ஞை நிலையையே நாங்கள் மனம் எனக் கூறுகின்றோம்.
பிரக்ஞை நிலையைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்:
செயற்பாடு
மனிதர்களாகிய எங்களால் சில விடயங்களைப் பார்க்க முடியும் அதேபோல் சில விடயங்களைப் பார்க்க முடியாது. உதாரணமாக ஒரு மேசையில் உள்ள புத்தகத்தை உங்களால் பார்க்க முடியும், ஆனால் நாய் குரைக்கும் சத்தத்தை உங்களால் பார்க்க முடியாது. (குறைந்தபட்சம் ஒரு கணனி இந்த சத்தத்தை ஒலி அலைகளாக மாற்றும் சந்தர்ப்பம் இல்லாதபோது)
வேற்றுகிரகத்திலிருந்து வேற்றுமனிதர் ஒருவர் பூமிக்கு வந்துள்ளார் என வைத்துக்கொள்வோம். அந்த வேற்றுக்கிரகவாசி, உலகத்தை நீங்கள் பார்க்கும் விதத்திலிருந்து வேறுபட்டதாகப் பார்ப்பார். உண்மையில், அவளால் புவியீர்ப்பைப் பார்க்க முடியும். ( பொருட்கள் வானத்திலும் அதற்கப்பாலும் பறக்காமல் வைத்திருக்கும் சக்தியே புவியீர்ப்பாகும்). வேற்றுகிரகவாசி பொருட்களை முற்றிலும் வேறுபட்டவிதமாகவும் பார்ப்பார். அது எவ்வாறு வேறுபட்டிருக்கும்? அவளுடைய கண்கள், மூளை மற்றும் மனம் எங்களுடையதை விட எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதில் இது தங்கியுள்ளது.