‘மொழிபெயர்ப்புகளுக்கு இடையில்’
இலங்கையில் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்திற்காக மூன்று மொழிகளில் பணியாற்றுவதன் அர்த்தம் என்ன?
ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மூன்று மொழிகளிலும் நவீன மற்றும் சமகால கலைச் சொற்களுக்கு பொருத்தமான சொற்கள் மற்றும் வெளிப்பாடுகளைக் கண்டறிவதற்கு சிந்தனை மற்றும் உடன்பாடு தேவை. இந்த வார்த்தைகளை யார் கண்டறிந்தார்கள் மற்றும் அவை எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?
“மொழிபெயர்ப்புகளுக்கு இடையில்” என்பது கலைத்துறையில் மும்மொழிப் பணியை முன்னெடுத்துச் செல்லும் நபர்களின் சரியான நேரத்தில் ஒன்றுகூடல் ஆகும். இதனால் அது இலங்கையின் பலதரப்பட்ட மொழி சமூகங்களை அணுகக்கூடியதாகவும் உள்ளடக்கியதாகவும் உண்டாகும். இந்த இரண்டு நாட்களில், கலைஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் கவிஞர்கள் மொழிபெயர்ப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவார்கள். ‘மொழிபெயர்ப்புகளுக்கு இடையில்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இலங்கை MMCA. இலங்கையின் மொழி அரசியல், கொள்கை மற்றும் திட்டமிடல் ஆகியவற்றின் ஒலிக்கும் வரலாறுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு பதிலளிப்பதற்காக Musicmatters நிருவப்பட்டுள்ளது.
இத் திட்டம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கலை முன்முயற்சிகளுக்கான அறக்கட்டளையால் ஆதரிக்கப்படுகிறது.
அனைத்து நிகழ்வுகளும் கணனி ஊடாக மற்றும் ஜூம் வழியாக நடத்தப்படும்.
சிறப்புரை
17 டிசம்பர் 2021, பி.ப. 4
சிறப்பு பேச்சாளர்: திநிதி கருநாநாயக
(ஆங்கில துறை, கொழும்பு பல்கலைக்கழகம்)
நெறியாளர்: பூஸதீ லியநாரச்சி, அருங்காட்சியகம் துணைமையர்
‘மொழிபெயர்ப்பு, நினைவு, கவிதை’
17 டிசம்பர் 2021 பி.ப 6
பி. அகிலன், கவிஞர் (நுண்கலை துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), கஞ்சுக தர்மஸிரி, நாடக கலைஞர் (ஆங்கில துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்), மற்றும் கீதா சுகுமாரன், முனைவர் வேட்பாளர் (மனிதநேயத்தில் பட்டதாரி திட்டம், யார்க் பல்கலைக்கழகம்)
நெறியாளர்: ருஹானி பெரேரா, எடுத்தாளுனர், கல்வி மற்றும் பொது திட்டங்கள்
‘அருங்காட்சியக நடைமுறைகளில் மொழிபெயர்ப்பு மற்றும் நிலை மாற்றம்’
18 டிசம்பர் 2021 பி.ப. 4
ஹஸிநி ஹபுதந்திரி, ஆய்வில் ஈடுபடுபவர் (இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், இலங்கை)
அருங்காட்சியக வல்லுநர்கள்
‘‘சமமான’ வார்த்தையைக் கண்டுபிடித்தல்’
18 டிசம்பர் 2021, பி.ப 6
டீ. சனாதனன் (நுண்கலை துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) மற்றும் பிரஸன்ன ரநபாஹு (தோல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிருவகம்)
நெறியாளர்: பூஸதீ லியநாரச்சி, அருங்காட்சியகம் துணைமையர்
‘வாசல்/ එළිපත්ත/ Threshold’
17 மற்றும் 18 டிசம்பர் 2021, பி.ப 7
Musicmatters மூலம் சிறப்பாக நியமிக்கப்பட்ட ஒரு டிஜிட்டல்