கலரி உரையாடல் அ.ஜேசுராசா
09 பெப்ரவரி 2020 – மு.ப. 11.30
ஆசிரியரும் எழுத்தாளருமான அ. யேசுராசாஅவர்கள்; அவர் 1975 இல் நிறுவிய ‘அலை’ சிற்றிதழ் பற்றி உரையாடும் கேலரி பேச்சில், எங்களுடன் கலந்து கொள்ளுங்கள். யாழ்ப்பாணத்தில் 1946இல் பிறந்த அ. யேசுராசா யாழ்ப்பாணத்தில் திரைப்படக் கழகச் செயற்பாடுகளில், 1979 இலிருந்து ஈடுபட்டு வருகிறார். 1975 இல், மூன்று நண்பர்களுடன் இணைந்து ‘அலை’ சிற்றிதழ் வெளியீட்டை ஆரம்பித்த அ. யேசுராசா, 25 ஆம் இதழிலிருந்து 35 ஆம் இதழ்வரை, தனியாக வெளியிட்டார். சிறுகதை, கவிதை, மொழியாக்கக் கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம், திரைப்படக் கட்டுரைகள் என, இவருடைய ஒன்பது நூல்கள் இதுவரைவெளிவந்துள்ளன.