பயிற்சிப்பட்டறை திஸ்ஸ டீ அல்விஸ்
11 ஜனவரி 2020 – மு.ப.11.00
திஸ்ஸ டி அல்விஸ் களிமண் மற்றும் பிளாஸ்டிசின் ஊடகங்களுடன் பணிபுரியம் ஒரு சிற்பி ஆவார். கடந்த 40 ஆண்டுகளில், பிளாஸ்டிசின், கம்பி மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களால் ஆன சிறு உருவங்கலை வடிவமைக்கும் ஒரு தனித்துவமான கலை நடைமுறையை அவர் உருவாக்கியுள்ளார். அவரது படைப்புகள் இராணுவ வரலாறுகள், பிரபலமான கலாச்சார நடைமுறைகள் மற்றும் முகலாய ஓவியம் போன்ற பல்வேறு வகையான குறிப்புப் பொருட்களுடன் ஈடுபடுகின்றன. ஒரு கலைஞராக, இயற்கையைப் பற்றியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் சிந்திக்க இளைஞர்களை ஈடுபடுத்தும் ஒரு தனித்துவமான கற்பித்தல் அணுகுமுறையை அவர் உருவாக்கியுள்ளார். அவர் எட்டு ஆண்டுகளாக பிரிட்டிஷ் ஸ்கூல் இந் கழம்பு பாடசாலையில் கற்பித்தார், மேலும் அனைத்து வயது குழந்தைகளுக்கும் பல களிமண் பட்டறைகளை நடத்தியுள்ளார்.