கலரி உரையாடல் டொமிக் சன்சோனி மற்றும் மைக்கல் மெய்லர்

23 மே வெள்ளிக்கிழமை, பி. ப. 6–7
புகைப்படக் கலைஞர் டொமினிக் சன்சோனி மற்றும் கல்வியலாளரும் பகுதி நேர அகராதி ஆசிரியருமான மைக்கல் மேலர் உடன் லக்கி சேனநாயக்கவின் (1937–2021) நாணயத் தாள் வரிவடிவங்களை ஆழ்ந்து நோக்கும் அமர்விலே எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். அவர்கள் ஒன்றாக சேனநாயக்காவின் கலை செயல்முறையையும் தொடருக்கான அவரது தொலைநோக்குப் பார்வையையும் பற்றி சிந்திப்பார்கள்
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 3 சேனநாயக்கவின் ‘Sketches for currency notes’ (1977–1979) ஐப் பார்வையிடலாம்.
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 3 ற்காக அருங்காட்சியகத்தின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த கலரி உரையாடல் அமையப் பெறுகிறது. 29 மே 2025 வரை இதனைப் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
இடம்: MMCA இலங்கை கலரிகள்