‘ஒரு ஒழுங்கற்ற ஆக்கம்/குழப்பம் செய்யுங்கள் கலையைச் செய்யுங்கள்’
அருங்காட்சியகப் பயிற்சியாளர், ஹரித் விரசிங்ஹா, கலையை உருவாக்குவதற்காக கலைஞர்கள் எவ்வாறு பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்கிறார்- மேலும் அவர் தனது சொந்தக் கலையை உருவாக்கத் தூண்டப்பட்டார்.
The title of this artwork is ‘GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017’. It was made in 2017 by the artist Muhanned Cader (b. 1966).
This work is made with a pen placed on a paper from the artist’s sketchbook. See the full caption
(1)”அவரது கலைப்படைப்புக்காக, முஹனட் காடர் தன்னிடம் இருந்த குறிப்புப் புத்தகம் மற்றும் பேனாவைப் பயன்படுத்தினார். இதைக் கண்டுபிடிப்பது எளிதானது, அதுவே அதனைச் சிறப்பானதாக்கியது”
(2)“அவர் பேனாவை எடுத்து புத்தகத்தன் மேல் வைத்திருந்தார். அவர் நகரும் வாகனத்தில் இருந்ததால் பேனா தானாகவே கிறுக்கல்களினை உருவாக்கத் தொடங்கியது. கலைஞர் எதையும் ‘செய்யவில்லை’. அல்லது அவர் செய்தாரா? நீங்கள் என்ன நினைக்கறீர்கள்? அவர் அந்தப் புத்தகப்பக்கத்தில் ஒரு பெரிய ஒழுங்கற்ற கிறுக்கலினை/ஆக்கத்தினைச் செய்தார், மேலும் அவர் மிகவும் வேடிக்கையாக இருந்தார். இதை ‘கலை’ என்று அழைக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ”
(3) “நான் அவ்வாறான குழப்பங்களை உருவாக்குவதை விரும்புகிறேன், எனவே நான் செய்த ஒழுங்கற்ற ஆக்கத்தின் படம் இங்கே. உள்ளது. நிறைய வண்ணங்கள் உள்ளன, எனவே இது சுவாரசியமாக உள்ளது (குறைந்தபட்சம் நான் அப்படித்தான் நினைக்கிறேன்). ஒவ்வொரு முறையும் நான் அதைப் பார்க்கும்போது, நான் எவ்வளவு வேடிக்கையாக இருந்தேன் என்று நினைக்கிறேன். எனது ‘ஒழுங்கற்ற ஆக்கத்துடன்’ நான் எவ்வளவு ஆக்கப்பூர்வமாக இருந்தேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ”
குறிக்கோள்கள்
–கலைப் பொருட்களைப் பெறத் தேவையில்லை, கண்டெடுக்கப்பட்ட சாதாரண பொருட்களைப் பயன்படுத்தி என்னால்ஒரு கலைப்படைப்பை உருவாக்க முடியும்.
-எனது கலைப்படைப்புகளை மதிப்பீடு செய்து அதில் என்னால் மாற்றங்களைச் செய்ய முடியும்.
படிமுறை 1
“கேன்வஸ்” (canvas) ஆக செயல்படக்கூடிய ஒன்றைக் கண்டுபிடிக்கவும் கலைப்படைப்பு ஒரு கேன்வஸ் (canvas) அல்லது வெற்றுக் காகிதத்துண்டில் உருவாக்கப்பட வேண்டியதில்லை. கலைப்படைப்பை உருவாக்கக்கூடிய ஒன்றை நீங்கள் உங்கள் வீட்டில் கண்டுபிடிக்கவும். ஒரு செய்தித்தாள், ஒரு புத்தகம், ஒரு தட்டு எதுவாயினும் நல்ல யோசனை தான், அதேவேளை உங்கள் கலைப்படைப்பை உருவாக்க முழு அறை அல்லது புத்தக அலுமாரியையும் கூடப் பயன்படுத்தலாம் (அதற்கு முதலில் உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் அனுமதி கேட்கவும்).
படிமுறை 2
ஒரு ஒழுங்கற்ற ஆக்கம்/குழப்பம் செய்யுங்கள் நீங்கள் எளிதாகக் கண்டுபிடிக்கக்கூடிய சில பொருள்கள் அல்லது ஊடகங்களினை பெற்றுக்கொண்டு பெரிய ஒழுங்கற்ற ஆக்கம்/குழப்பத்தை ஏற்படுத்துங்கள். பெயிண்ட், கலர் பென்சில்கள், தக்காளி சோஸ், தோட்டத்திலிருந்து பெற்ற குப்பை, கயிறு துண்டுகள், குச்சிகள், கற்கள் எதுவாயினும் பயன்படுத்தலாம் – உங்கள் பெற்றோர் அல்லது உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பெரியவர் இருக்கும் வரை எதையும் இதற்குப் பயன்படுத்தலாம். உங்களுடன் சேருமாறு அவர்களிடம் கேளுங்கள். இதை ‘அழகாக’ மாற்றுவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வேடிக்கையாக இருங்கள்.
படிமுறை 3
அதைக் கலைப்படைப்பாக மாற்றவும் இப்போது உங்களிடமுள்ள குழம்பிய பொருட்களை ஒரு கலைப்படைப்பாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!
முதல் படி அதை நன்றாகப் பார்த்து, அதைப் பற்றி நீங்கள் விரும்பும் விஷயங்களைக் கண்டுபிடியுங்கள். சுற்றியுள்ள விஷயங்களை மாற்றவும். மேலும் விவரங்களைச் சேர்க்கவும் அல்லது அவ்விடயங்களில் மாற்றம் செய்யவும். பின்னோக்கிச் சென்று, உங்கள் கலைப்படைப்பை மீண்டும் பாருங்கள், நீங்கள் உருவாக்கியதை நீங்களே உங்களுக்கு விவரிக்கவும். உங்கள் கலைப்படைப்பைப் பற்றிப் பகிர்வது கலையை உருவாக்குவதன் ஒரு பகுதியாகும். எனவே நீங்கள் செய்த ஒழுங்கற்ற ஆக்கத்தின்/ குழப்பத்தின் புகைப்படத்தை எடுத்து உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்வதற்கு முன்பு அதைச் சுத்தம் செய்யுங்கள்.