‘ஒரு புகைப்படத்தை உயிரூட்டல்’
Sharmini Pereira, Curator of the exhibition ‘one hundred thousand small tales’, sets a fun activity using this photograph.
The title of this artwork is ‘St. Peter’s Old Boys’ Reunion’.
It was made in 1991 by the artist Stephen Champion (b. 1959).
This work is a high quality reproduction photograph made from the original taken by the artist. See the full caption
(1) ‘நூறாயிரம் சிறிய கதைகள்’ கண்காட்சியின் எடுத்தாளுனரான சாமினி பெரேரா, ஒரு புகைப்படத்தைப் பயன்படுத்தி ஒரு செயற்பாட்டினை அமைத்துக்கொள்கிறார்.
“ஸ்டீபன் சாம்பியனின் ‘St Peter’s Old Boys Reunion’ புகைப்படத்தைப் பார்க்கவும்.”
(2) “இந்த ஆண்கள் நடனமாடுகிறார்கள், ஆனால் அவர்கள் எதற்காக நடனமாடுகிறார்கள்?”
(3) “’கற்பனை செய்யவிடுங்கள், மறைந்த மனு திபாங்கோவின்(Manu Dibango) ஒரு தடத்தை நான் தெரிவு செய்வேன், ‘Soul Makossa’ எனப்படும் பாடலிற்கு நாங்கள் நடனமாடுவோம்.
(4) யூடியூப்பில் (YouTube) “Soul Makossa – Manu Dibango (Original)” ஐத் தேடுங்கள், அதைக் கேட்கச் சிறிது நேரம் செலவிடுங்கள்.
(5) ‘Soul Makossa’ க்கு நடனமாட 1 நிமிடத்தைச் செலவிடுங்கள்.
குறிக்கோள்கள்:
– என்னால் ஒரு புகைப்படத்தைப் பார்க்கவும், அதைப் பற்றிக் கேள்விகளைக் கேட்கவும் முடியும்.
– ஒரு கலைப்படைப்பை எனது தூண்டலாகப் பயன்படுத்தி எனது சொந்தச் செயல்களை என்னால் செய்ய முடியும்.
படிமுறை 1
புகைப்படத்தை உற்றுப் பாருங்கள். அனைத்து விவரங்களிலும் கவனம் செலுத்துங்கள். விவரங்களின் பட்டியலை தயாரிக்கவும். அவை பெரியவிவரங்களா? அல்லது சிறியவையா? இன்னும் சிறிய விவரங்கள் முக்கியமாக இருக்க முடியுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
படிமுறை 2
கேள்விகள் கேட்கவும் என்ன நடக்கிறது? புகைப்படத்தில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்? அறியும் ஆர்வத்துடன், நீங்கள்யோசிக்கக்கூடிய அனைத்துக் கேள்விகளையும் கேளுங்கள்.
படிமுறை 3
இந்த கேள்விகளுக்கு பதிலளியுங்கள். உங்கள் கற்பனையைப் பயன்படுத்துங்கள். இந்த புகைப்படத்தில் என்ன நடக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அங்கே தவறான பதில்கள் இல்லை.
படிமுறை 4
இந்த கேள்விகளுக்கு பதிலளியுங்கள். உங்கள் கற்பனையைப் பயன்படுத்துங்கள். இந்த புகைப்படத்தில் என்ன நடக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அங்கே தவறான பதில்கள் இல்லை. அந்தப் புகைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எப்படி என்பதை உணர இந்தச் செயற்பாடு உங்களுக்கு உதவக்கூடும். மேலும், படைப்பாளி அந்தப் புகைப்படத்தை ஏன் எடுத்தார் என்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.