பயிற்சிப்பட்டறை கன்யா டி’அல்மெய்தாவுடன் ‘Writing the Moment’
மார்ச் 12 ஞாயிறு பி.ப 3–5 வரை
இலங்கையின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்தின் முதலாவது எழுத்துப் பயிற்சிப்பட்டறையை, கன்யா டி’அல்மெய்தா நடத்தவுள்ளார். இச் சிறப்பு பொது நிகழ்ச்சியானது, தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அரசியலைப் பற்றி எழுதுவதற்கான வழிகாட்டுதலை நாடும் அனைத்து வயதான மற்றும் வகையான எழுத்தாளர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் சுழற்சி மூன்றிலுள்ள கலைப்படைப்புகளையொட்டி தமது கருத்துக்களை சுயமாக எழுதுவதற்கு கன்யா வழிகாட்டுவார்.
பட்டறைக்கான சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொள்ளல் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் உருவாக்கப்போகும் எழுத்தாக்கங்களுக்காக ஆவலுடன் காத்திருங்கள்.