வாசிப்பு குழு கலாநிதி ஷஷிகலா அஸ்ஸல்லவுடன் ‘தாயகங்களை செயல்படுத்துதல்; மீண்டும் செயல்படுத்துதலும்’
1 ஜூலை சனிக்கிழமை, பி.ப. 3–5வரை
‘அந்நியர்’ கண்காட்சியுடன் தொடர்புடைய இந்த இரண்டாவது வாசிப்புக் குழுவில், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்படைப்புகளுடன் கூட ஷங்கரி சந்திரனின் ‘Song of the Sun God’ (2017) நூலுடன் விமர்சன ரீதியாக ஈடுபடுவதற்கு, களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும் ஆங்கிலத் துறைக்கு தலைவருமான கலாநிதி. ஷஷிகலா அஸ்ஸல்லவுடன் இணைந்து கொள்ளுங்கள். புலம்பெயர்ந்தோர் மற்றும் வீடு பற்றிய கருத்துக்கள் தொடர்பாக புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாயங்களை கலாநிதி. அஸ்ஸல்ல நுணுக்கமாக வாசிப்பார். பங்கேற்பாளர்கள் பதிவுசெய்தவுடன், இப்புத்தகம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். மேலும், அவர்கள் வாசிப்பு குழுவில் கலந்துகொள்வதற்கு முன்பு அதை வாசிக்குமாறு கேட்கப்படுகிறார்கள்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த வாசிப்பு குழு தொகுக்கப்பட்டுள்ளது.
அனுமதி இலவசம். அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.