பயிற்சிப்பட்டறை கியவண முத்தர உடன் ‘மினெட்டின் முத்திரையை உருவாக்கல்’ (18 வயதிற்கு மேற்பட்டோர்)

ஜூன் 1 சனிக்கிழமை, பி.ப. 3–5
மினெட் டி சில்வாவிற்கு (1918–1998) ஏன் முத்திரை வெளியிடப்படவில்லை? முத்திரை வெளியிட்டு அவரையும் அவரது வாழ்வையும் நாம் நினைவு கூரலாமா? முத்திரைகளில் பெண்கள் என்ற வரலாற்றை ஆராய்ந்து, மினெட்டை அவரது காலத்து முத்திரைகள் ஊடாக நினைவு கூரும் நிரோஷன மற்றும் விரங்கா பீரிஸ் (கியவண முத்தர) உடன் இணைந்து கொள்ளுங்கள்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இப்பயிற்சிப்பட்டறை தொகுக்கப்பட்டுள்ளது.