கலரி உரையாடல் டீ. சனாதனன் மற்றும் நெலூஃபர் டெ மெல்
19 பெப்ரவரி புதன், பி. ப. 5–7.30
சுரேஷ்ட எடுத்தாளுநர் சந்தேவ் ஹன்டியுடன் கலைஞரும் கலை வரலாற்றாலாளருமான டீ. சனாதனன் (பி.1979) மற்றும் பேராசிரியர் நெலூஃபர் டெ மெல் கலந்து கொள்ளவுள்ள உரையாடலில் இணைந்து கொள்ளுங்கள். தற்போது ‘முழு நில அமைப்பு’ சுழற்சி 2 ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சனாதனனின் படைப்புகளான ‘Grandma’s Courtyard II’ (2004), ‘Drawers of War Transactions’ (2019), and ‘Nation’ (2015) குறித்து அவர்கள் கலந்துரையாடுவார்கள். அப் படைப்புகள் இராணுவமயமாக்கல், நினைவு, மற்றும் மக்கள் மயக் கலாச்சாரம் பற்றிப் பேராசிரியர் நெலூஃபரின் எழுத்தாக்கங்களுடன் தொடர்புறுபவையாக அமையும்.
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 2 ற்காக அருங்காட்சியகத்தின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த கலரி உரையாடல் பெறுகிறது. 2 மார்ச் 2025 வரை இதனைப் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
இடம்: MMCA இலங்கை கலரிகள்