வாசிப்பு குழு நட்டாஷா கின்வாலாவுடன்
8 செப்டம்பர் வெள்ளிக்கிழமை, பி.ப 6–7.30 வரை
‘அந்நியர்’ கண்காட்சியின் வாசிப்பு குழுவின் நான்காவது அமர்விற்கு, எடுத்தாளுநர் மற்றும் எழுத்தாளர் நடாஷா கின்வாலாவுடன் வேற்றுமை, அடையாளம் மற்றும் உரிமை எடுத்தல் போன்ற கண்காட்சியுடன் தொடர்புபட்ட கருப்பொருட்களை பற்றி அலசி ஆராய இணையுங்கள். மீனா கந்தசாமி மற்றும் வார்சன் ஷையரின் கவிதைகள் மற்றும் பனி அபிடி எழுதிய ‘The Distance from Here’ (2009) கவிதையையும் ஜேம்ஸ் பால்டுவிண்ணின் கட்டுரையான ‘The Stranger in the Village’ நுணுக்கமாக ஆராயவுள்ளார். பதிவு செய்யும் அனைவருக்கும் இக் கவிதைகள் மற்றும் கட்டுரை அனுப்பிவைக்கப்படும். வாசிப்பு குழுவிற்கு வரும் முன்னர் பார்த்து அல்லது வாசித்த பின்னர் கலந்து கொள்ளுதல் சாலச்சிறந்ததாகும்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த வாசிப்பு குழு தொகுக்கப்பட்டுள்ளது.
அனுமதி இலவசம். அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.