வாசிப்பு குழு பேராசிரியர் நெலுஃபர் டி மெல் உடன்
மே 27 சனிக்கிழமை, பி.ப. 3–5வரை
இது ‘அந்நியர்’ கண்காட்சியுடன் தொடர்புடைய வாசிப்புக் குழுக்களின் முதல் பதிப்பாகும். ஒரு இலக்கிய படைப்புடனும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்படைப்புகளுடனும் விமர்சன ரீதியாக ஈடுபடுவதற்கு கொழும்பு பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரான நெலுஃபர் டி மெல் அவர்களுடன் கலந்து கொள்ளுங்கள். சல்மான் ருஷ்டி 1991ம் ஆண்டு எழுதிய கட்டுரையான ‘Imaginary Homelands’ மற்றும் ரியென்சி க்க்ருசின் ‘Sun Man’ என்ற இரு புத்தகங்களையும் விரிவுரையாளர் டி மெல் நுணுக்கமாக வாசிப்பார். பதிவு செய்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் இக்கட்டுரை மின்னஞ்சலின் மூலம் அனுப்பி வைக்கப்படும். வாசிப்பு குழுவிற்கு வரும்முன்னர் இவ்விரு கட்டுரைகளையும் முன்கூட்டியே வாசிக்க வேண்டும்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த வாசிப்பு குழு தொகுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.