வாசிப்பு குழு பேராசிரியர் ஹர்ஷன ரம்புக்வெல்ல உடன் ‘உள்ளார்ந்த அந்நியத்தன்மையை எதிர்வுகொள்ளல்’
![Harshana Rambukwella 12 August web Harshana Rambukwella 12 August web](https://mmca-srilanka.org/wp-content/uploads/2023/08/Harshana-Rambukwella-12-August-web-scaled-1350x834.jpg)
12 ஓகஸ்ட் சனிக்கிழமை, மு.ப 10.30–பி.ப 12.30 வரை
‘அந்நியர்’ கண்காட்சியுடன் தொடர்புடைய இந்த வாசிப்புக்குழுவில், நம்பகத்தன்மை எனும் கருப்பொருளை ஆழ்ந்து நோக்கவும், மற்றும் தேசியவாதம் எவ்வாறான வழிகளில் உள்ளார்ந்த அந்நியத்தன்மையை உருவாக்குகின்றது என்பதை விமர்சன ரீதியாக அணுகவும் தற்போது NYU அபு தாபியில் வருகைப் பேராசிரியராகப் பணிபுரியும் ஒப்பீட்டு இலக்கியம் மற்றும் காலாசாரக் கற்கைகளுக்கான பேராசிரியர் ஹர்ஷன ரம்புக்வெல்லவுடன் இணைந்து கொள்ளுங்கள். 2016 ம் ஆண்டு இலங்கையின் 68 ஆவது சுதந்திரதின விழாவில் ஒபேரா பாடகி கிஷானி ஜெயசிங்க பாடிய ‘தந்நோ பூதுங்கே’ எனும் ஆற்றுகையையும், ‘The Politics and Poetics of Authenticity: A Cultural Genealogy of Nationalism’ (2018) எனும் அவருடைய நூலிலிருந்து ‘Authentic Problems’ எனும் அத்தியாயத்தையும் பேராசிரியர் கூர்ந்து வாசிப்பார். பங்குபற்றுபவர்கள் இந்நிகழ்விற்குப் பதிவு செய்த உடன் தேவையான உரை மூலங்கள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். பங்குபற்றுனர்கள் இந்த வாசிப்புக்குழுவில் கலந்து கொள்வதற்கு முன்பு அனுப்பிவைக்கப்பட்ட மூலங்களை வாசிக்க/பார்க்க பரிந்துரைக்கப்படுகின்றனர்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த வாசிப்பு குழு தொகுக்கப்பட்டுள்ளது.
அனுமதி இலவசம். அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.