கலரி உரையாடல்: ரம்லா வஹாப்-சல்மான் மற்றும் சுமேத கலேகம ஆகியோருடன் ‘கெடெஸும் தோட்ட நகரமும்’
3 மே வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7
ஆய்வாளரும் அமரிக்க இலங்கை ஆய்வு நிறுவனத்தின் சிரேஷ்ட பணிப்பாளருமான ரம்லா அவர்கள் ஓவியரும் கட்டடக் கலைஞருமான சுமேத உடன் பேசுகிறார். சமூக வீட்டுத்திட்டம், பங்களிப்புக் கட்டடக்கலை மற்றும் நவீன தோட்ட நகரம் ஆகிய விடயங்களை அணுகும் வகையிலான பற்ட்றிக் கெடெஸின் ஆக்கபூர்வ அறுவைசிகிச்சை குறித்து அவர்கள் பேசவுள்ளனர். கெடெஸின் பணிகளால் ஈர்க்கப்பட்ட மினெட் டி சில்வா அவர்கள் (1918–1998) வடபுலுவ வீட்டுத் திட்டத்திற்கான (1958) தனது வடிவமைப்பில் அவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளார்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் வழங்கப்படுகிறது.