வாசிப்பு குழு ஆன்யா ரத்னாயகவுடன் ‘காடு, நகரம், மற்றும் மீன் பிடிக்கும் பூனை’
23 ஜனவரி செவ்வாய்க்கிழமை, பி. ப. 6–7.30
இவ் வாசிப்பு குழுவில், Small Cat Advocacyயின் ஆன்யா ரத்னாயக, கொழும்பு நகரத்தின் ஈரநிலப்பரப்பில் வாழும் மீன்பிடி பூனையைப் பற்றி கலந்துரையாடுகிறார். தேர்வு செய்யப்பட்ட வாசிப்பு குறிப்புகள் நகர்ப்புற ஈரநிலங்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் ஆகும். காடு மற்றும் நகரத்தப் பற்றிய கருத்துகளை ஒன்றிணைக்கும்படி கலந்துரையாடுவார். அன்யா அவரின் தலைப்பை MMCA இலங்கையின் கண்காட்சியான ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ மற்றும் கொழும்புஸ்கோப்பின் ‘Way of the Forest’ எனும் இரு தலைப்புகளை இணைக்கும் முறையில் கலந்துரையாடுவார். வாசிக்க வேண்டிய கட்டுரைகள் பங்கேற்பாளர்கள் முன்பதிவு செய்யும் பொழுது மின்னஞ்சல் செய்யப்படும். வாசிப்பு குழுவிற்கு வரும் முன்னர் கட்டுரைகளை வாசித்து வருதல் முக்கியமாகும்.
MMCA இலங்கையின் நான்காவது கண்காட்சியான ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ மற்றும் கொழும்புஸ்கோப்பின் எட்டாவது பதிப்புரையையும் இணைத்து இவ் வாசிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.