கேலரி உரையாடல் இருஷி தென்னகோன், சுமேத கெலேகம, மற்றும் சுமுது அதுகோரல ஆகியோருடன் ‘‘இரண்டாம் தொகுதியை’ உருவாக்குதல்’
10 பெப்ரவரி சனிக்கிழமை, பி.ப. 4–5
வெளியிடப்போகின்ற, ‘இரண்டாம் தொகுதி: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ என்ற ஆய்வைப் பற்றி, MMCA இலங்கையின் தலைமை எடுத்தாளுனரான ஷாமினி பெரெய்ரா அவர்கள், கலைஞர்களான இருஷி தென்னகோன் (பி. 1989), சுமேத கெலேகம (பி. 1988), மற்றும் சுமுது அதுகோரல (பி. 1980) ஆகியோருடன் பேசுகிறார். தற்போது ‘88 ஏக்கர்கள்’ கண்காட்சியில் திரையிடப்படும் ‘is this an architectural documentary?’ (2023) என்ற கலைஞர்களின் அனிமேஷன் ஆவணப்படத்தின் எழுத்தாக்கமும் இவ்வெளியீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் வழங்கப்படுகிறது.