சிறுவர்களுக்கான செயல்திறன் நிகழ்ச்சி: ‘எனது மகிழ்ச்சி இடம்’ (9 முதல் 12 வயது வரை)
30 செப்டெம்பர் சனிக்கிழமை, பி.ப 1–2 வரை
சிறுவர் தின சிறப்பு பொது நிகழ்ச்சியாக, எமது வருகை கல்வியலாளர்கள் சிறுவர்களுடன் இணைந்து அவர்களின் மகிழ்ச்சி, அமைதி தரக்கூடிய விடயங்களை நாளார்ந்த பொருட்களை வைத்து மீள் உருவாக்க உதவுவார்கள். இச் செயல்திறனானது சமூக உணர்ச்சி கற்றல் சார்ந்து சிறுவர்களின் கற்பனை வளம், விமர்சன சிந்தனை மற்றும் சமூக மற்றும் உளவியல் நலனை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இச் செயல்திறனானது ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ‘அந்நியர்’ கணக்கிட்டாச்சி 22 அக்டோபர் 2023 வரை காட்சியிலிருக்கும். இந் நிகழ்ச்சியானது முற்றிலும் இலவசமாகும். தேவையான அனைத்து பொருட்களும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டும். குறிப்பிட்ட அளவு வெற்றிடங்களே உள்ளன.