வாசிப்பு குழு சச்சினி செனவிரத்னவுடன் ‘ஷேஸ்பியர், பின்காலனியக் கோட்பாடு மற்றும் ஏனையோர்’
7 அக்டோபர் சனிக்கிழமை, பி.ப. 3–5 வரை
‘அந்நியர்’ கண்காட்சியின் ஐந்தாவதும் இறுதியுமான வாசிப்பு குழு, கல்வியாளர் மற்றும் ஆய்வாளர் சச்சினி செனவிரத்னவுடன் அதிகாரம், வேற்றுமை மற்றும் உடைமையை பின்காலனித்துவ கோட்பாட்டின் கண்ணோட்டத்தில் உரையாடுகிறார். வில்லியம் ஷேஸ்பியரின் ‘The Tempest’ நாடகத்தின் (ரிச்சர்ட் மில்லர் மொழிப்பெயர்ப்பு) 3வது ஆக்ட்டின் 5வது பகுதியின் அய்மி சிசேயேரின் 1969 தழுவலை நுணுக்கமாக வாசிப்பார். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பதிவு செய்த பின்னர் புத்தகம் மின்னஞ்சல் செய்யப்படும். வாசிப்பு குழுவிற்கு வரும்முன்னர் வாசித்து விட்டு வருதல் சிறந்தது.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த வாசிப்பு குழு தொகுக்கப்பட்டுள்ளது.
அனுமதி இலவசம். அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.