பயிற்சிப்பட்டறை சபீர் ஒமர் மற்றும் ஷஹ்டியா ஜமால்தீனுடன் தையல் மற்றும் அலங்காரத் தையல் (அனைத்து வயதினருக்கும்)
மார்ச் 11 வெள்ளி, பி.ப 6- பி.ப 7.30 வரை
Register here
சபீன் மற்றும் ஷஹ்டியாவுடன் இணைந்து எவ்வாறு கதைகளை தையல் மற்றும் அலங்காரத் தையலூடாக கூற முடியுமென்பதை ஆராய்வோம்.
10–16 வயதினருக்கு பொருத்தமானதாகும்.
சபீன் ஒமர் துணியுடன் வேலை செய்யும் ஓவியராவார். இவரின் பல படைப்புகள் மெலிதாக கீறப்பட்ட அல்லது வெட்டப்பட்ட சட்டங்கள் நெய்யப்பட்ட துணியை ஒத்ததாக உருவாக்கப்பட்டிருக்கும். பல சித்திரங்கள் தனிப்பட்ட கதைகள், கூர்ந்து கவனித்து வரைதல் மற்றும் மிகச்சிறிய ஓவியங்களின் குறியீடுகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஷாஹ்டியா ஜமைடீன் பல்-துறை ஓவியர் மற்றும் கட்டிட வடிவமைப்பாளராவார். அலங்காரத் தையல் மற்றும் நூல் சித்திரம் போன்றவற்றை முதலில் ஆராய்ந்து பின்னர் இவற்றையே முதன்மை ஊடகமாக்கிக் கொண்டார். அலங்காரத் தையல் ஊசியைக்கொண்டு தனிப்பட்ட மற்றும் கூட்டமைப்பு பெண்ணிய கண்ணோட்டத்துடன் படைப்புகளை உருவாக்குகிறார். அவர் டிஜிட்டல், நிறுத்து-இயக்க அனிமேஷன், நுண்கலை மற்றும் சுவரோவியங்களுடனும் பணி புரிகிறார்.
Photo credits to Ruvin de Silva for House of Kal 2021