விரிவுரை சி. அஞ்சலேந்திரனுடன் ‘இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பின்னான காலங்களில், நவீன கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பின் முன்னோடிகள்’
9 பெப்ரவரி வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7.30
கட்டடக் கலைஞரும் கல்வியாளருமான சி. அஞ்சலேந்திரன், இலங்கையில் நவீன கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு பற்றிய தனது நீண்டகால ஆராய்ச்சியைக் குறித்து பேசுகையில், மினெட் டி சில்வா (1918–1998) உள்ளிட்ட முன்னோடிகளால் இந்த துறைகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதனையும் அவர் எடுத்துக்காட்டுவார். அக்கால கட்டடக் கலைஞர்கள் பலர் முகம்கொடுக்க வேண்டியிருந்த பின்காலனித்துவ இலங்கையின் கட்டடக்கலை சார்ந்த உடனடி சிக்கல்கள், மற்றும் அதனைத் தொடர்ந்து, உள்நாட்டுப் போரின் சூழ்நிலைகள் ஆகியவற்றை அஞ்சலேந்திரனின் தொழில் மற்றும் ஆராய்ச்சி விவரிக்கின்றன.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் விரிவுரை வழங்கப்படுகிறது.