ஆற்றுகை தனுஷ்க மாரசிங்க மற்றும் கே கே ஸ்ரீநாத் சதுரங்கவுடன் ‘Text-ing-Be-ing’
![28072023_Performance Text-ing Be-ing with Danushka Marasinghe and K K Srinath Chathuranga_Website 28072023_Performance Text-ing Be-ing with Danushka Marasinghe and K K Srinath Chathuranga_Website](https://mmca-srilanka.org/wp-content/uploads/2023/06/28072023_Performance-Text-ing-Be-ing-with-Danushka-Marasinghe-and-K-K-Srinath-Chathuranga_Website-2-scaled-1350x834.jpg)
28 ஜூலை வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 வரை
‘அந்நியர்’ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஊடாட்டம் நிறைந்த ஆற்றுகையான ‘Text-ing-Be-ing’ (2019) ஐ, கலைஞர்களான தனுஷ்க (பி. 1985) மற்றும் ஸ்ரீநாத் (பி. 1987) ஆகியோர் செயல்படுத்துகின்றனர்.
கட்டத்தின் எதிர் திசைகளில் நின்ற வண்ணம், ஒவ்வோரு சதுரத்தினுள்ளும் வெள்ளை சுண்ணக் கட்டியுடன் சிங்கள எழுத்துக்களை எழுத ஆரம்பித்தனர். இவ்வாறாக, கட்டத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு செல்வதே அவர்களின் இலட்சியமாக இருந்தது. கட்டத்தின் நடுவில் கலைஞர்கள் சந்தித்துக்கொண்டதன் பின்னர், மற்றவர் எழுதிய எழுத்துக்களை ஒன்றொன்றாக அழித்து அவர்களின் எழுத்துக்களை எழுதினர். இவ்வாறு சில முறை செய்த பின்னர் கலைஞர்கள் பார்வையாளர்களை பங்குகொள்ளுமாறு அழைத்தனர். இதன் பொழுது நடந்த கூட்டாக எழுதும் செயற்பாட்டினால் கட்டத்துக்கு மேலும் பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு மொழியும், அம்மொழியை அறியாதவர்களால் ஊடுருவ முடியாத தொடர்பாடல் அமைப்பொன்றை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை இப் படைப்பு ஆராய்கின்றது. ஆனால் இந்நிகழ்ச்சியின் விதிகளின் படி, ஒரு மொழியை அழித்து வேறு அந்நிய மொழியொன்று எழுதப்படலாம்.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் ஆற்றுகை வழங்கப்படுகிறது.