வாசிப்பு குழு தாரிக் ஜசீலுடன் ‘மினெட் டி சில்வாவின் கட்டடக்கலை வழிமுறை’
22 பெப்ரவரி வியாழக்கிழமை, பி.ப. 6–8
கட்டடக் கலைஞர்கள் மற்றும் கட்டடக் கலைஞர் அல்லாதவர்களுக்கும் ஏற்ற இந்த வாசிப்புக் குழுவில், University College London, UK இன் மனித புவியியல் பேராசிரியர், தாரிக் ஜசீல் அவர்கள், மினெட் டி சில்வாவின் (1918–1998) கட்டடக்கலை வழிமுறையை ஆராய்வார். தெரிந்தெடுக்கப்பட்டுள்ள நூல்களில், பட்ரிக் கெடெஸ் (1854–1932) எழுதிய ‘Conservative Surgery’ (1947), அந்தனி விட்லர் (1941–2023) எழுதிய ‘Architecture’s Expanded Field’ (2004), மற்றும் மினெட் டி சில்வா எழுதிய ‘The Life and Work of an Asian Woman Architect’ (1998) இன் ‘CIAM (Congress Internationals D’Architecture Moderne)’ என்ற பகுதி, ஆகியவை அடங்கும். வாசிப்புக் குழுவிற்கு பதிவு செய்தவுடன், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் இந்த நூல்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், வாசிப்பு குழுவில் கலந்துகொள்வதற்கு முன் அவற்றை வாசிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.