கேலரி உரையாடல் பூபதி நளின் மற்றும் சுமுது அத்துகோரல ‘ஆவணப்படத்தை ஆராய்வோம்’
மார்ச் 22 வெள்ளிக்கிழமை, பி.ப 6–7வரை
திரைப்பட இயக்குனர் மற்றும் விமர்சகர் பூபதி நளின் ஓவியரும் கட்டிடக்கலைஞருமான சுமுது அத்துகோரலவுடன் இலங்கையில் ஆவணபடத்தின் வளர்ச்சியைப் பற்றி உரையாடுகிறார். அருங்காட்சியகத்தில் தற்பொழுது காட்சியிலிருக்கும் ‘is this an architectural documentary?’ (2023) எனும் ஆவணப்படத்தை அவர்களின் உரையாடலில் அலசி ஆராய்வார்கள். இக் கலந்துரையாடல் பெரும்பாலும் சிங்களத்தில் நடைபெறும்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் வழங்கப்படுகிறது.