மகளிர் தின சிறப்பு கலரி உரையாடல் வரை பல்தசார், எர்மிசா டீகல் மற்றும் ஜயந்தி குரு-உத்தும்பலாவுடன்
12 சனி, மு.ப. 11–பி.ப. 12 வரை
Register here
எர்மிசா டீகல் (சட்டத்தரணி), குரு-உத்தும்பலா (துணிகர செயலாளர் மற்றும் சமூகச் செயற்ப்பாட்டாளர்) மற்றும் வ்ராய் பல்த்தசார் (சமூகச் செயற்ப்பாட்டாளர்) துணை எடுத்தாளுணர் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சிநிரல் பொறுப்பாளர் பிரமோதா வீரசேகரவுடன் குடும்பம் மற்றும் இலங்கை வரலாற்றில் அதன் பரிணாமம் பற்றி உரையாடவுள்ளனர்.
வ்ரே பல்த்தசார் பெண்ணிய ஆய்வாளர் மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர் ஆவார். பத்து வருடங்களுக்கு மேலாக அவர் தன்னுடைய நேரத்தை சமூகத்தை மாற்றியமைக்கும் திட்டங்களுக்கு அர்ப்பணித்துள்ளார். முற்போக்கு பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அழுத் பியப்த் எனும் இரு குழுக்களில் உறுப்பினராக இருக்கும் இவர் இக்குழுக்கள் மூலமாக அரசியல் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வருகிறார். ஆய்வாளராக பணியாற்றும் இவரின் முக்கிய பால் மற்றும் அரசியல் வெளியை பற்றியதாகவுள்ளது. வ்ரே கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெண்கள் மற்றும் பால் கல்விகளில் முதுகலைப் பட்டத்திற்காக படித்துக்கொண்டுள்ளார். அவர் இலங்கையில் கொழும்பில் வசித்தும் பணிபுரிந்தும் வருகிறார்.
எர்மிசா டீகல் 15 வருடம் அனுபவம் பெற்ற சட்டத்தரணியாவார். மனித உரிமைகள், பொதுமக்கள் சட்டம் மற்றும் குடும்ப சட்டத்தில் பணி புரிந்து வருகிறார். துன்புறுத்தல், தன்னிச்சையான கைது, வீட்டு வன்முறை மற்றும் பாகுபாடு போன்ற வழக்குகளில் பணிபுரிந்து வருகிறார். எர்மிசா அவரின் சிறப்பு சட்டம், அபிவிருத்தி மற்றும் ஆட்சி பற்றிய முதுகலைப் பட்டத்தை கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் (லண்டன்) பாடசாலையிலிருந்து பெற்றுக்கொண்டுள்ளார். எர்மிசாவிற்கு அபிவிருத்தி துறையில் குறிப்பாக மனித உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகளில் 20 வருடத்திற்கும் அதிகமான அனுபவம் கொண்டவராவார்.
ஜயந்தி குரு-உத்தும்பல பால் மற்றும் பால்நிலை போன்ற விடயங்களில் செயற்படும் பெண்ணிய சமூக செயற்பாட்டாளர் ஆவார். இங்கிலாந்து சசெக்ஸ் பல்கலைக்கழத்திலிருந்து பால் கல்விகளில் முதுகலைப்பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து பெண்கள் கல்விகளில் முதுகலை டிப்ளோமாவும் பெற்றுள்ளார். 2016ம் ஆண்டில் எவரெஸ்ட் மலை உச்சியை தொட்ட முதல் இலங்கையராவார். இச் சாதனையை கௌரவிக்கும் விதமாக மகளிர் விவகார அமைச்சகத்தால் 2016-2019ம் ஆண்டு வரை பெண்கள் உரிமைக்கான நல்லிணக்க தூதுவராக நியமிக்கப்பட்டார். தனித்தியங்கும் ஆலோசகராக தற்பொழுது ‘Delete Nothing’ எனும் ஒன்லைன் தளத்தின் துணை ஸ்தாபகராக பணிபுரிந்து வருகிறார். இத்தளம் இலங்கையின் தொழில்நுட்ப வன்முறையை எதிர்கொள்ளுவதற்காக உருவாக்கப்படுகிறது.