திரைப்பட திரையிடல் ‘விராகய’
டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–8.30 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
மாட்டின் விக்கிரமசிங்க (1890–1976) 1956 ம் ஆண்டில் எழுதிய ‘விராகய’ என்று தலைப்பிடப்பட்ட நாவலை அடிப்படையாகக் கொண்டு, திஸ்ஸ அபேசேகர (1939-2009) இயக்கிய ‘விராகய’ திரைப்படத்தின் (1987) திரையிடலுக்கு வாருங்கள். இத்திரைப்படத்தில் சனத் குணதிலக்க, சபீதா பெரேரா, ஶ்ரீயானி அமரசேன, ஜோ அபேவிக்ரம ஆகியோர் நடித்துள்ளனர். ஆஷ்லி ஹல்பேயால் 1985ம் ஆண்டில் எழுதப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பான ‘The Way of the Lotus Viragaya’ என்ற நாவலை 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி வரை ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் பார்க்கலாம்.
இப்படம் சிங்கள மொழியில், ஆங்கில வசனங்களுடன் திரையிடப்படும்.
மாட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளைக்கும் திஸ்ஸ அபேசேகரவின் குடும்பத்தினருக்கும் குறிப்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.