கலரி உரையாடல் ‘வெளிநாடுகளில் உள்ள கலைஞர்கள்’ பற்றி சந்தேவ் ஹன்டியுடன் உரையாடுவோம்.
டிசம்பர் 10 சனிக்கிழமை, பி.ப. 4–5 வரை
நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய
ஆபிரிக்க-ஆசிய எழுத்தாளர்கள் இயக்கமானது, காலனித்துவத்துக்கு எதிராக மூன்றாம் உலகப் போராட்டங்களை இலக்கிய மற்றும் கலாச்சார நிலைப்பாட்டிலிருந்து வென்றெடுக்க, 1958ம் ஆண்டில் தோன்றியது. இவ்வியக்கம் தொடர்பாக, கலைத் தயாரிப்பு மற்றும் நாடுகடந்து வாழ்தல் பற்றி MMCA இலங்கையின் எடுத்தாளுனரான சந்தேவ் ஹேண்டியுடன் கலந்துரையாடுவதற்கு வாருங்கள். ஆபிரிக்க-ஆசிய எழுத்தாளர்கள் இயக்கத்தின் படைப்புகள் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி வரை ‘சந்திப்புகள்’ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.