கேலரி உரையாடல் அனுரங்கி மெண்டிஸ், ஷயாரி டி சில்வா மற்றும் ஷெஹ்லா லதீப் உடன் ‘மினெட்டிற்கு பின்னர்: கட்டிடக் கலையில் இலங்கைப் பெண்கள்’
மார்ச் 7 வியாழக்கிழமை, பி.ப 6.30–7.30வரை
இவ் சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சியையொட்டி எமது தலைமை எடுத்தாளுநர் ஷர்மினி பெரெய்ரா அனுரங்கி, ஷயாரி மற்றும் ஷெஹ்லாவுடன் பெண்களாக கட்டிடக் கலையில் அவர்களின் அனுபவங்களைப் பற்றி உரையாடுவார். அனுரங்கி City School of Architectureஇல் விரிவுரையாளராகவும் DXMID Design நிறுவனத்தில் பங்குதாரராகவும் உள்ளார். ஷயாரி ஜெப்ஹரி பாவா நிதியின் தலைமை எடுத்தாளுநராகவும், ஷெஹ்லா Urbanarc Architectural Consultants நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் வழங்கப்படுகிறது.