பயிற்சிப்பட்டறை ஷெனுகா கொரியாவின் ‘உங்களுக்கான முழுமையான இடத்தை உருவாக்குங்கள்’ (16 வயதிற்கு மேற்பட்டோர்)
24 பெப்ரவரி சனிக்கிழமை, பி.ப. 3–5
மினெட் டி சில்வா (1918–1998), வடபுழுவ வீட்டுத் திட்டத்தை (1958) வடிவமைக்க, குடியேறப் போகின்ற நபர்கள் பங்கேற்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தும் முன்னோடியான அணுகுமுறையை அடிப்படையாக வைத்து, கட்டடக் கலைஞர் ஷாடியா ஜமல்டீன் மற்றும் விளக்கப்பட ஓவியர் ஷெனுகா கொரெயா ஆகியோர் ஒரு பட்டறையை நடத்துவார்கள். இப்பட்டறையின்போது, பரிசோதனை எம்ப்ரொய்டரியாலான தமது சொந்த சித்திரத் திரைச்சீலையை உருவாக்குவதற்கு பங்குபற்றுவோர் ஒன்றாக செயற்படுவர். தையல், எம்ப்ரொய்டரி, விளக்கப்படம் வரைதல் ஆகியவற்றில் அனுபவம் தேவையில்லை.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இப்பயிற்சிப்பட்டறை தொகுக்கப்பட்டுள்ளது.