கலரி உரையாடல் ஹஸனா சேகு இஸதீன் மற்றும் சய்நப் இப்ரஹிமுடன் ‘பெண்ணாக, முஸ்லீமாக மற்றும் வேற்றாளாக இருத்தல்.’
23 ஜூன் வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 வரை
ஆராயச்சியாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான ஹஸனா மற்றும் சய்நப், கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான துணை எடுத்தாளுநர் பிரமோதா வீரசேகரவுடன் பெண்ணாக இருத்தலிலுள்ள இடைவெட்டுகள், அவர்கள் கொண்டிருக்கும் பன்முகப்பட்ட வகிபாகங்கள் மற்றும் அடையாளங்கள் பற்றி உரையாடுகிறார்கள். இந்தக் கலந்துரையாடலானது அவர்களின் சொந்த அனுபவங்கள் மற்றும் பெண்களின் உரிமைகள், ஒடுக்கப்பட்ட சமூகங்கள், சட்டம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் அவர்கள் மேற்கொண்ட பணிகளை மையபடுத்தி இடம்பெறவுள்ளது. மேலும் ஒக்டோபர் 22 ம் திகதி வரை நடைமுறையிலுள்ள ‘அந்நியர்’ கண்காட்யை மையபடுத்திய வண்ணமாகவும் அமைந்துள்ளது.
22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் தொகுக்கப்பட்டுள்ளது.