‘ஜெஸ்மின் நிலனியுடன் வண்ணம் தீட்டல்’
தொடரைப் பற்றி ‘Address of Residence’
இந்த படைப்புகள், யாழ்ப்பாணம், வவுனியா என இரண்டு வேறுபட்ட இடங்களைப் பற்றி பேசுகின்றன. சிவில் யுத்தத்தின் காரணமாக என்னுடைய குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் குடியேறினர். 2010ல் நுண்கலையைக் கற்பதற்காக நான் யாழ்பாணம் திரும்ப நேர்ந்தது. ஒரு கலைஞராக தொடர்ந்து ஈடுபட நான் முடிவெடுத்தேன். ஆகவே வாடகை கொடுத்து நான் யாழ்ப்பாணத்தில் வசிக்கிறேன். என்னுடைய குடும்பம் இன்னும் வுவுனியாவில் தான் வசிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு இடத்தை என்னுடைய ஸ்டூடியோவாகவும் நிரந்தர வதிவிடமாகவும் தெரிவு செய்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. என்னால் இன்னமும் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை. இந்த பதற்றத்தை, இந்தத் தொடரிலுள்ள படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.
தரைத்தோற்றம்
யாழ்ப்பாணம் –“நான் பெரிய பழமையான தேவாலயங்களையும் மதில்களையும் பார்க்கின்றேன் (மீள்குடியேற்ற வேலிகள் மற்றும் உயர் பாதுகாப்பு வலய வேலிகள்). அதோடு அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலங்களில் மக்களின் இடிந்த வீடுகள் போகன்வில்லா மரங்களுடன். யாழ்ப்பாண நகரிலுள்ள சில பழைய வீடுகள்,வீட்டின் உரிமையாளர்களால் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.”
வவுனியா– “பன்னிரண்டு வருடங்களிற்கு முன்பு வீட்டுக் குடியிருப்புத் திட்டத்தில் அமைக்கப்பட்ட கிராமத்திலேயே என்னுடைய குடும்பம் வசிக்கின்றது. குடியிருப்பு உருவாவதற்கு முன்பு இந்த நிலம் சட்தவிரோத குவாரியாகக் காணப்பட்டது. இங்கு இருக்கும் மக்களுக்கு சில பிரச்சனைகள் காணப்படுகின்றன. அதாவாவது நிலையில்லாத அத்திவாரத்தில் வீடு கட்டப்பட்டமையால், சிலநேரங்களில் அசைவதும் நொறுங்குவதுமாகக் காணப்படுகின்றது. தண்ணீர் பெற்றுக்கொள்வதற்கு இந்த மக்கள் எப்போதும் சிரமப்படுகின்றனர். அதனால், இந்தக் இராமத்தில் பல குழாய்க்கிணறுகள் உள்ளன. அதோடு, மிகவும் குறுகிய, போதிய இடமற்ற தேவாலயங்களும் உள்ளன.”
Pick your drawing:
Address of Residence I
Address of Residence II
Address of Residence III
Address of Residence IV
1990ம் ஆண்டு நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். சிவில் யுத்தத்தின் காரணமாக என்னுடைய குடும்பம் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து சென்றது. நான் என்னுடைய பாடசாலை கல்வியை 2009ல் நிறைவு செய்தேன். அதன் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் BFA படத்தை பூர்த்தி செய்தேன். ஒரு கலைஞராகவேண்டுமென்பதே என்னுடைய குறிக்கோளாக இருந்தது, அது உண்மையில் நிகழ்ந்தது. கொழும்பு, கோவா, நியூ டெல்லி மற்றும் டாக்காவில் நடந்த கண்காட்சிகளில் நான் பங்குபற்றினேன். தற்போது நான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வசிப்பதுடன் அங்கேயே தொழில்படு கலைஞராக பணிபுரிகின்றேன்.
-ஜஸ்மின் நிலானி ஜோசப், 2020