‘ஊக்கம் அடைதல். ஊக்கமாய் இருத்தல்.’
Download this worksheet as a pdf
எங்களுடைய வீட்டில் இருந்தபடியே வாசிப்பு எங்களை பல புதிய உலகங்களுக்கு அழைத்துச் செல்கின்றது, புதிய மனிதர்களை சந்திக்க மற்றும் புதிய விடையங்களை அறிந்து கொள்ள வழிவகுக்கிறது.
புத்தகம் எனும் இந்த தனித்துவமான கடவுச்சீட்டினூடாக நீங்கள் எவ்வாறு ஹோக்வர்ட்ஸ் (Hogwarts) இலிருந்து மிடில் எர்த் (Middle Earth) க்கும், அங்கிருந்து மடோல் டூவ (Madol Doova) க்கு பாய்ந்து சென்று பின்னர் வொண்டர்லாண்ட் (Wonderland) இல் நடக்கும் மாட் ஹட்டர் (Mad Hatter) இன் தேநீர் உபசாரத்திற்கு உடனே வரமுடிவது எவ்வளவு ஆச்சர்யமான விடயம் தெரியுமா?
நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருந்தால், இப்போது ஒரு பயணத்திற்கு தயாராகப்போகின்றீர்கள். உங்களுக்குள்ளிருக்கும் எழுத்தாளரை கண்டடைய உதவும் ஒரு பயணம் இதுவாகும்.
நாங்கள் இதை ஆரம்பிப்பதற்கு முதல், அண்மையில் எனக்கு நடந்த ஒரு விடயத்தை உங்களுக்கு கூறுகின்றேன்–
அன்று ‘இரண்டு மாதங்களாக வீட்டில் இருக்கின்றேன்! விசேஷமாக எதுவும் நடக்கவில்லை. நான் கூறுவதற்கு கதைகள் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது?’ இவ்வாறு சிந்திக்கையில் எனக்கு பயமாக இருந்தது எங்களில் அநேகமான எழுத்தாளர்களுக்கு இருக்கும் பிரச்னை இதுதான். உத்வேகம் என்பது எங்கோ உள்ளது என நாங்கள் நினைப்பதுடன் விஷேடமாக எதுவும் நடக்கவில்லை என்றால் எங்களால் எழுத ஆரம்பிக்க முடியாது எனவும் எண்ணுகின்றோம்.
சிந்தனைகள் எங்கிருந்து வருகின்றன?
நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், ஒரு எழுத்தாளர் உத்வேகம்’கிடைத்தவுடன் எழுதுகின்றார் என்று. நான் சிறுமியாக இருக்கும் போது உத்வேகம் எவ்வாறு தொழிற்படும் என நான் நினைத்துள்ளேன். அது மந்திரம் போல இருக்குமா? இல்லை ஒரு கனவில் முழுக்கதையும் அந்த எழுத்தாளருக்கு கூறப்படுவது போல இருக்குமா? பல வருடங்ககள் எழுதியதன் பின்னர் உத்வேகம் என்பது நாங்கள் ஒன்றை பார்க்கும் போதோ இல்லை உணரும் போதோ எங்களால் உருவாக்கப்படுவது என நான் அறிந்து கொண்டேன்.
எமக்கு வாழ்க்கையில் உத்வேகம் அளித்த தருணங்கள் உள்ளன. அமைதியையும் சமாதானத்தையும் நாங்கள் வீட்டில் இருந்த காலத்தில் நன்கு பெற்றுள்ளோம், ஆகவே நாங்கள் எமது உத்வேகத்தின் இருப்பிடத்திலிருந்து தேவயானவயற்றை எடுத்து இந்தப் பயணத்தை தொடங்குவோம்.
படைப்பாற்றல் என்பது உடற்பயிற்சி தேவைப்படும் தசையைப் போன்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தத் தசையைத் தயார்படுத்தி உடற்பயிற்சி செய்தால் நீங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்வுகளை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பீர்கள்!
செயல்பாடு : தினமும் உத்வேகம்
உங்களுக்குத் தேவையானவை:
— அண்மையில் வாங்கிய பலசரக்கு பொருட்களின் கணக்கு பட்டியல் (bill)
— ஒரு பென்சில் / பேனா
— ஒரு காகிதம்
படிமுறை 1: ஆராய்ச்சி
உங்களுடைய கணக்குப்பட்டியலில் உள்ள 5 சுவாரஷ்யமான பொருட்களைப் பாருங்கள், அவை ஒவ்வொன்றும் உங்கள் வீட்டில் இருப்பவர்களைபற்றி என்ன கூறுகின்றன என்பதை அவதானியுங்கள். இதோ எங்களுடைய வீட்டின் கணக்குப்பட்டியலிலிருந்து ஒரு உதாரணம்.
7kg கோழி : எங்களுடைய நாய்கள் மட்டும் கோழி உண்பார்கள்
ஒவ்வாமை மருந்து : எனக்கு தூசியால் ஒவ்வாமை ஏற்படும்
ஒரு பெட்டி மெழுகுவர்த்தி : மின்வெட்டு இப்போது அடிக்கடி இடம்பெறும்.
படிமுறை 2: மீள சிந்தித்தல்
இப்போது சிந்தியுங்கள், ஒரு கணக்குப்பட்டியலை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் உங்களுடைய குடும்ப அங்கத்தவர்களின் குணாதிசயங்களை அடையாளப்படுத்த விரும்பினீர்கள். உங்கள் குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் எனும் வீதம் பட்டியல்படுத்தி, அப்பொருட்கள் ஒவ்வொன்றும் அங்கத்தவர்களைப் பற்றி கூறும் விடயங்களையும் குறிப்பிடுங்கள்.
படிமுறை 3: மீள எழுதுதல்
பொருட்களையும் அவற்றின் பின்புலக்கதைகளையும் கலந்து தனியான ஒரு இயல்பு கிடைக்கும்படி ஒழுங்குபடுத்துங்கள். சில பொருட்களுக்கு நீங்கள் புதிய அர்த்தங்களும் கொடுக்கலாம்.
என்னுடைய பொருட்களின் பட்டியலிலிருந்து ஒரு கதைக்கான சுருங்கிய வடிவம் இதோ:
சுமுடு தன்னுடைய நாய்களுடன் தனியாக வாழ்ந்து வருகின்றார். அவர் கோழி மட்டுமே உண்பார் அனால் அவருடைய நாய்கள் சைவஉணவு உண்பவர்கள். அவருக்கு இருள் என்றால் பயம் என்பதால் ஒரு மெழுகுவர்த்தி பெட்டி எப்போதும் வாங்குவார். அவருடைய நாய்களுக்கு தூசியினால் ஒவ்வாமை ஏற்படும். ஒருநாள் மின்வெட்டு ஏற்பட்ட போது நாய்களுக்கு வாங்கிய ஒவ்வாமை மருந்து முடிந்துவிட்டது என அவர் அறிகிறார்.