கலரி உரையாடல் கிரெசீட் கொலெட்டுடன்
28 பெப்ரவரி 2020 – 6.30pm
இந்தசொற்பொழிவில், கொலட்டின் மூத்த மகள் க்ரேஸிடி கொலெட், சமகாலஅரசியல் மற்றும் சமுதாயத்தைப்பற்றி கருத்து தெரிவிக்க பயன்படுத்துவதற்காக கேலிச்சித்திரத்தின் வடிவத்தை ஆராய்ந்த இலங்கையின்ஆரம்பகால கலைஞர்களில் ஒருவரான அவரதுதந்தையின் பணி மற்றும்வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார். ஆப்ரி கொலெட் (1921-1992), இலங்கையின் முதல் நவீனகலைக் குழுவாக இன்றுகருதப்படுகின்ற ‘43 குழுமத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில்ஒருவராவார். ‘43 குழுவை நிறுவுவதற்குமுன்பு, கொலெட் 1940ம்தசாப்தத்தின் முற்பகுதியில் டேவிட் பேன்டர் (1900-1975) என்ற கலைஞரின் கீழ் ஓவியம்பயின்றார். அரசியல் வர்ணனை தொடர்பாகஅரசாங்கம் விதித்த நிபந்தனைகளின் காரணமாக 1960 இல் கோலெட் இலங்கையைவிட்டு வெளியேறினார். க்ரேஸிடி கொலெட், ராயல் மெல்போர்ன்இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்கிராஃபிக் டிசைனைப் படித்த ஒருகலைஞர் ஆவார். 1980 ஆம்ஆண்டில் எடின்பர்க் கலைக்கல்லூரியில் டேபஸ்ட்ரி துறையில் முதுகலைபடிப்பை முடித்தார் மற்றும் 2003 ஆம் ஆண்டில் மோனாஷ் பல்கலைக்கழகத்தில்எம்.எஃப்.ஏ பட்டம் பெற்றார். இலங்கையில்பிறந்த அவர், தற்போதுமெல்போர்னில் வசிக்கிறார்.