விரிவுரை பவானி ஃபொன்சேகாவுடன் ‘போட்டியிடும் நிலங்கள்: உரிமை, தொழில் மற்றும் இன்றைய பாரம்பரியம்’

24 மே சனிக்கிழமை, பி. ப. 6–7.30
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் நிலப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவுள்ள சட்டத்தரணியும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய (Centre for Policy Alternatives) சிரேஷ்ட ஆய்வாளருமான பவானி ஃபொன்சேகாவுடன் இணைந்து கொள்ளுங்கள். அதில் அவர் இன்று இலங்கையில் நிலவும் காணிப் பிரச்சினைகளைக் கட்டமைக்கும் சட்ட, அரசியல், மற்றும் வரலாற்றுத் தாக்கங்கள் குறித்த ஆழமான கருத்துகளை முன்வைப்பார். ‘Land in the Northern Province’ (2011), ‘The Intersectional Trends of Land Conflicts in Sri Lanka’ (2024) போன்ற முக்கியமான அறிக்கைகளை உள்ளடக்கியதாக ஒரு தசாப்த விடயங்களைக் கொண்ட ஆய்வினை அவர் பகிர்ந்து கொள்வார். கொள்கையாக்கம், நிறுவனமய செயன்முறைகள், சமூக உரிமைகோரல்கள் ஊடாக காணி உரிமை, ஆக்கிரமிப்பு, பரம்பரைச் சொத்து குறித்த முரண்கள் எப்படி நோக்கப்படுகின்றன என்பது பற்றியும் அவர் பரிசீலிப்பார்.
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 3 ற்காக அருங்காட்சியகத்தின் பொது நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த விரிவுரை அமையப் பெறுகிறது. 29 மே 2025 வரை இதனைப் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
இடம்: MMCA இலங்கை கலரிகள்