கேலரி உரையாடல் ஷாஹ்டியா ஜமால்தீன், சுமுது அத்துக்கோரல, மற்றும் சுசில் லமஹேவாவுடன் ;மினெட் டி சில்வாவை முன்னிறுத்தி உரையாடல்களை கட்டியெழுப்புவோம்
மார்ச் 1 வெள்ளிக்கிழமை, பி.ப 6–7வரை
ஷாஹ்டியா ஜமால்தீன், சுமுது அத்துக்கோரல, மற்றும் சுசில் லமஹேவா எமது கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான எடுத்தாளுநர் பிரமோதா வீரசேகரவுடன், அண்மையில் வெளியிடப்பட்ட சஞ்சிகைகளைப் பற்றி உரையாடுவார்கள். ‘The Architect’ மற்றும் ‘Vaasthu’, மினெட் டி சில்வாவின் (1918–1998) 25வது மறைந்த வருடத்தையொட்டி வெளியிடப்பட்டது. ஷாஹ்டியா மற்றும் சுமுது ‘The Architect’ மற்றும் ‘Vaasthu’ சஞ்சிகைகள் தலைமை மற்றும் பதிப்புரையாளர்கள் ஆவர். சுசில் இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் (SLIA) தலைவர் ஆவார். அருங்காட்சியகம் மற்றும் நிகழ்ச்சி அனுமதி முற்றிலும் இலவசமாகும்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் வழங்கப்படுகிறது.