உரையாடல் மற்றும் சமூக ஊடாட்ட கூட்டுறவு

நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்:

MMCA இலங்கை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தைச் சார்ந்த கலாசார பயிற்சியாளர்களை (ஓவியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், வழிநடத்துபவர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள்) குறிப்பாக பிணக்குகளை தீர்ப்பதற்கான உரையாடல் மற்றும் மாற்றுவழிகளை உள்ளடக்க விழைகின்றது. 

  • உங்களது சமூகத்தில் பிணக்குகள் ஏற்படுவதற்கான மூலக்காரணங்களை நேரிடையாக குறிப்பிடும் வண்ணம் கலை சார்ந்த திட்டங்களை உருவாக்குவத்தில் ஆர்வம் உள்ளவரா? 
  • கலை சார்ந்த உரையாடல் சாதனங்களை ADR முறை மூலம் உங்களது சமூகத்தில் உருவாக்க விரும்புகிறீர்களா? 
  • கலை திட்டம், சமூக ஊடாட்டம் மற்றும் பொதுமக்களுக்கான கல்விமுறைகள் போன்றவற்றைப் பற்றி கற்க ஆர்வம் உள்ளவரா? 

கூட்டுறவு திட்டம் மற்றும் கட்டமைப்பு:

  • MMCA இலங்கை மூன்று கூட்டுறவு அங்கத்தவர்களை ஆறு மாத திட்டத்திற்காக தெரிவு செய்யும். இவ் ஆறு மாதங்களில் மூன்று மாதங்கள் கொழும்பில் தங்கி பணி புரிய வேண்டும்.
  • இத் திட்டத்தின் முதல் மூன்று மாதங்கள், ஒவ்வொரு கூட்டுறவு அங்கத்தவரும் அவர்களின் மாகாணத்தில் வசிக்கும் ஒரு ஓவியருக்கு அவரின் கலைப்படைப்பிற்கு உதவுவார். (MMCA இலங்கை மூன்று ஓவியர்களை ‘Arts 4 ADR’ திட்டற்காக தேர்ந்தெடுக்கும்).
  • இறுதி மூன்று மாதங்கள் கூட்டுறவு அங்கத்தவர்கள், கொழும்பில் MMCA இலங்கையில் திட்டமிடல், மேம்படுத்துதல், பரீட்சித்து பார்த்தல், பாடத்திட்டங்களை முல்படுத்துதல் மற்றும் சாதனங்களை உருவாக்குவதை அருங்காட்சியகத்தின் பொது நிகழ்ச்சிகளினூடாக பணி புரிவார்கள். ADR சார்ந்த அணுகுமுறைகள் ஊடாக மூன்று சிறப்பு கலைப்படைப்புகளுடன் பொது மக்கள் ஊடாட வழிமுறைகளை உருவாக்குவார்கள்.
  • ஒவ்வொரு கூட்டுறவு அங்கத்தவாறும் குறைந்தது மூன்று பொது நிகழ்ச்சிகளை  செப்டம்பர் 2024 திறக்கப்பட இருக்கும் MMCA இலங்கையின் அடுத்த கண்காட்சிக்காக உருவாக்க வேண்டும்.
  • பயிற்சிக்கு பின்னரான செயற்பாடு: கூட்டுறவு அங்கத்தவர்கள் அவர்கள் வசிக்கும் மாகாணத்தில் 5 சமூகம் சார்ந்த பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கு செய்யும் வாய்ப்பை பெறுவர். 

தகுதிகள்:

  • விண்ணப்பதாரர்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கு அல்லது ஊவா மாகாணத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • கலை, சமூக செயற்பாடு, சமூக ஊடாட்டம், அல்லது தொடர்புபட்ட துறைகளில் ஆர்வம் அல்லது முன் அனுபவம் இருக்க வேண்டும்.
  • கலை மற்றும் சமூக மாற்றத்தில் கலையின் பங்களிப்பு மீதான தீவிர ஆர்வம்.
  • தமிழ் மற்றும்/அல்லது சிங்களம் பேசக்கூடிய திறன் கொண்டவருக்கு முன்னுரிமை 

விண்ணப்பம் மற்றும் சமர்ப்பித்தலுக்கான நிபந்தனைகள்:

  1. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளியுங்கள் 

(கீழ்காணும் லிங்கை தெரிவு செய்து உங்கள் பதில்களை சமர்ப்பியுங்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLScVofBhL_JqI4N7XQJz3gV6S4UjO2OqAxmAlv3Grejxmy_rUw/viewform)

  1. கலாசார பயிற்சியாளராக உங்கள் அனுபவங்கள் என்ன (200 வார்த்தைகள்)
  2. உங்கள் பனி மற்றும் ஆர்வங்கள் எவ்வாறு உங்கள் சமூக சூழலுக்கு தொடர்பான சமூக-அரசியல் தலைப்புகளுடன் தொடர்புபடுகின்றன? (25 வார்த்தைகள்) 
  3. இக் கூட்டுறவின் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளும் விடயங்களை உங்கள் சமூகத்திற்காக எவ்வாறு பயன்படுத்துவீர்கள்? (150 வார்த்தைகள்) 
  4. உங்களது கலைப் பயணத்தை தாக்கம் செலுத்திய முன்மாதிரி யார்? (50 வார்த்தைகள்)

2. துணைபுரியும் விடயங்கள்

விண்ணப்ப படிவத்தை நிரப்பிய பின்னர் உங்களின் மேலதிக ஆவணங்களை மின்னஞ்சல் ஊடாக (info@mmca-srilanka.org) file links, folders அல்லது pdfகளாக அனுப்பி வையுங்கள். உங்கள் மின்ஜல் ‘Dialogue and Civic Engagement Fellowship Application’ எனும் தலைப்பை கொண்டிருக்க வேண்டும்.

  1. அறிமுகம்: உங்களையும் உங்களின் பணியையும் அறிமுகப்படுத்தும் விளக்கக்காட்சி ஒன்றை காட்சிப்படுத்தல். இவ் விளக்கக்காட்சியில் கலாசார பயிற்சியாளராக உங்களை ஊக்குவிப்பது என்ன என்ற கேள்வியையும் நீங்கள் பதிலளிக்க வேண்டும். உங்கள் கற்பனை வளத்தை உபயோகிங்கள். இதுவே நாம் உங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பாகும். இது எழுத்து வடிவமாகவோ (400 வார்த்தைகளுக்கு குறைவாக) அல்லது காணொளி அல்லது ஒலிப்பதிவாகவும் (மூன்று நிமிடங்களுக்கு குறைவாக) இருக்கலாம். இம் முறைகளில் அறிமுகம் வழங்க இயலாதோருக்கு நாம் உதவி வழங்குவோம்.
  2. பரிந்துரைக் கடிதம்: உங்களது பனியைப் பற்றி தெரிந்த நபர் அல்லது நிறுவனத்திடம் இருந்து கடிதம். அவர்கள் உங்கள் இருவருக்கும் இடையேயான பணி சார்ந்த உறவை ஊர்ஜிதப்படுத்த வேண்டும், எவ்வளவு காலம் பனி புரிந்தீர்கள் மற்றும் வேலையின் தரம். இக் கடிதத்தில் அவர்களின் கையொப்பம் மற்றும் தொடர்பு கொள்ளக்கூடிய தகவல்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்.
  3. புத்திப்பிக்கப்பட்ட தன்விவரக்கோவை (CV): தொடர்புபட்ட அனுபவங்கள், சாதனைகள் மற்றும் திறன்கள் பற்றிய விளக்கங்கள்.
  4. துணை சேர்க்கும் விடயங்கள்: உங்களின் கலாசார பணிக்கான மாதிரிகள் (காணொளிகள், படங்கள், எழுத்து), மதிப்பீடுகள், நேர்காணல்கள் அலல்து ஏனைய தொடர்புபட்ட ஆவணங்கள்.

விண்ணப்ப இறுதிநாள்:

மார்ச் 15, 2024 விண்ணப்ப இறுதி நாளாகும்.

தேர்ந்தெடுப்பதர்கான வரைகூறு:

விண்ணப்பதாரர்கள் அவர்களின் கற்பனை வளம், சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் இத் திட்டத்தின் பன்பான்மையுடனான பொருத்தம் போன்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். துறை வல்லுநர்கள் மற்றும் குறிப்பிட்ட விண்ணப்பத்திரிகள் நேர்காணலின் மூலம் தெரிவு செய்யப்படுவர்.