இரண்டாவது தொகுப்பு (2024)

Second Volume
கண்டியில் அமைந்துள்ள வடபுழுவ வீட்டுத் திட்டம் (1958) இலங்கைக் கட்டடக் கலைஞரான மினெட் டி சில்வாவினால் (1918–1998) வடிவமைக்கப்பட்டது. அவர் தனது சொந்தப் பணிக்காக நவீன கட்டடக்கலை ஸ்டூடியோ ஒன்றினை 1948ல் உருவாக்கினார்; இலங்கை சுதந்திரம் பெற்றுக் கொண்ட அதே வருடம். பாவனையாளர்களின் வினைத்திறன் மிக்க பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட அவரது அற்புதமான சமூக வீட்டுத் திட்டமானது பன்முக இன-மத சமூகத்தைச் சேர்ந்த அரச பணியாளர்களுக்கு குறைந்த விலையில் தங்குமிடத்தை வழங்கும் புதிய யுகத்திற்கான அறிவிப்பாக அமைந்தது. பிரதம ஆராய்ச்சியையும் முன்னர் பிரசுரிக்கப்படாத காப்பக விடயங்களையும் இணைத்து உள்ளடக்கியதாக ‘இரண்டாவது தொகுப்பு’ அமைகிறது. சமகால கட்டடக் கலைஞர்களான இருஷி தென்னக்கோன், சுமேத கெலகம மற்றும் சுமுது அதுகோரள ஆகியோரது ‘is this an architectural documentary?’ (2023) எனும் படவரைவு ஆவணத்தின் மொழிபெயர்ப்பும் இதில் உள்ளடங்குகிறது. டி சில்வா அவர்களது ‘Experiments in Modern Regional Architecture in Ceylon 1950 to 1960’ (1965–1966) இப் புத்தகத்தில் விசேட சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப கட்டுரையானது 1966 ம் ஆண்டில் கட்டடக் கலைஞர்களுக்கான சிலோன் நிறுவனத்தினால் முதன் முதலில் பிரசுரிக்கப்பட்டது.
டி சில்வா அவர்களின் மரணத்திற்குப் பின்னர் பிரசுரிக்கப்பட்ட ‘The Life and Works of an Asian Woman Architect Vol. 1’ (1998) எனும் அவரது சுயசரிதையுடன் அவர் ஆரம்பித்து வைத்த காப்பக செயன்முறையாக்கத்தினைத் தொடர்கிறது ‘இரண்டாவது தொகுப்பு’. இப் பிரசுரம் அளவில் ஒன்றுபட்டாலும் சற்றே வேறுபட்ட கோணத்தில் டி சில்வாவின் ஒற்றை செயற்திட்டத்தை நோக்குகிறது. அதாவது, ஒரு நேரத்தில் ஒரு செயற்திட்டம் தான் என அவர் ஆரம்பித்து வைத்த பழக்கத்தை மீளக் கொணரும் வகையிலான எதிர்காலத்தில் இன்னும் பல ‘தொகுப்புகளை’ பிரசுரிக்கும் வாய்ப்புகளுக்கு வழி கோலும் பிரசுரம். ஏறத்தாழ 70 வருடங்களுக்கு முன்னரேயே உள்ளூர் பொருட்களை உபயோகிப்பதன் முக்கியத்துவத்தை முன்வைத்த டி சில்வா அவர்களது எண்ணத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் எவ்வித கடதாசி விரயமும் இல்லாமல் உள்ளூரில் கிடைக்கும் கடதாசியை உபயோகித்து அச்சிடப்பட்டுள்ளது இந்த ‘இரண்டாவது தொகுப்பு’.
ஷர்மினி பெரேரா மற்றும் கௌமதி ஜெயவீர ஆகியோரால் தொகுக்கப்பட்டது
நியா தண்டபாணியால் வடிவமைக்கப்பட்டது
நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்டது
160 பக்கங்கள்
ISBN 978-624-5318-01-8
பரிமாணங்கள்: 255mm x 300mm x 10mm
மொழி: ஆங்கில மொழி

இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள MMCA இலங்கையிலும் ‘இரண்டாவது தொகுப்பினைப்’ பெற்றுக்கொள்ளமுடியும்

இங்கே ஓடர் செய்துகொள்ளவும்

‘இரண்டாவது தொகுப்பு’யின் தமிழ் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்புகளை கீழே இலவசமாக தரவிறக்கம் செய்யமுடியும்.

 ‘දෙවැනි වෙළුම’ (2024)
‘இரண்டாவது தொகுப்பு’ (2024)