‘கலை ஒரு உணர்வு’
நிகழ்ச்சிதிட்ட முகாமையாளர் பூஜா ஸ்ரீவாஸ்தவா, ஒரு தாயாக அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி ஒரு கலைப்படைப்பு எவ்வாறு அவருக்கு நினைவூட்டியது என்பதைச் சொல்கிறார்.
The name of this artwork is ‘Cradle’.
It was made in 2012 by the artist Manori Jayasinghe (b. 1972).
This work is made with safety pins. See the full caption
(1) “ஒரு தாயாக, எனது குழந்தைகளைப் பராமரிப்பதும் அவர்களைப் பாதுகாப்பாக பேணுவதும் எனக்கு மிகவும் முக்கியமானவை.”
(2) “ஒரு தாயாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் அது மிகவும் கடினம். அவர்களது வாழ்க்கையைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடிந்தளவுக்கு அவர்களினை சொகுசாகப் பேணுவதற்குமான ஒரு வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.”
(3) “இந்தப்படைப்பு ஒரு பெற்றோராக இருப்பது எவ்வளவு சவாலானது என்பதை எனக்குச் சிந்திக்க வைக்கிறது. தொட்டில் என்பது ஒரு குழந்தை ஓய்வெடுப்பதற்கான ஒரு இடமாகும், அங்கு அவர்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் தூங்க முடியும். பாதுகாப்பு ஊசிகள்(safety pins) உலகின் கடுமையான யதார்த்தத்துக்கு நம்மைத் திரும்பக் கொண்டு வருகின்றன.”
(4) ‘இது உங்களுக்கு என்னத்தை உணரவைக்கிறது?’
குறிக்கோள்கள்
– ஒரு இடம், அல்லது ஒரு கலைப்படைப்பு தொடர்பான உணர்ச்சிகளை என்னால் அடையாளம் காண முடியும்
– நான் எப்படி உணர்கிறேன் என்பதைப் பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனையை என்னால் செய்ய முடியும்
படிமுறை 1
உங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றை நினைத்துப் பாருங்கள் இது உங்களுக்குச் சொந்தமான ஒன்றாகவோ, உங்களைப் பற்றிய ஒரு அம்சமாகவோ அதாவது நீங்கள் பெருமைப்படும் அல்லது உங்களைச் சிறப்பானதாக்கும் ஒன்றாகவோ இருக்கலாம்.
படிமுறை 2
இந்த விஷயங்கள் உங்களை எப்படி உணரவைக்கும்? இந்த விஷயம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா? ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைப் பற்றி நினைக்கும் போது உற்சாகமாக இருக்கிறீர்களா? சில நேரங்களில் அதை விவரிக்க உங்களிடம் வார்த்தைகள் இல்லாமல் இருக்கலாம், அது சரி.
படிமுறை 3
சொற்கள் இல்லாமல் இதை எப்படிக் காட்ட முடியும்? மனோரி ஜெயசிங்கவின் ‘Cradle’ படைப்பைப் பாருங்கள். எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் அவர் என்ன உணர்கிறார் என்பதை எங்களுக்குக் காட்ட முயற்சிக்கிறார். அவர் பாதுகாப்பு ஊசிகளூடாக (safety pins) என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்று நினைக்கிறீர்கள்? நீங்களும் கூட இதைச் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். வீட்டிலேயே உங்களுக்கு பிடித்த இடத்தை, நீங்கள் இசைக்கும் ஒரு பாடலினைக்கூட நீங்கள் படமாக வரைய முடியும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: வார்த்தைகள் இருக்கக்கூடாது/ பயன்படுத்தக்கூடாது
படிமுறை 4
அதை மற்றவர்களுக்குக் காட்டுங்கள்! நீங்கள் உருவாக்கியதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குக் காட்டுங்கள். அந்தக் கலைப்படைப்பைப் பார்க்கும்போது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். நீங்கள் உணர்ந்த அதே உணர்வா?