பயிற்றுநர்கள் 

முன்பள்ளிச் சிறார்களுக்கும் தொடக்கநிலை, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் இலங்கையின் நவீன மற்றும் சமகால கலைகள் பற்றிய எண்ணங்கள், சூழ்நிலைகள், குறிப்பான விடயங்கள் பற்றி அறிமுகப்படுத்த பயிற்றுநர்களுக்கு உதவும்வண்ணம், எம்மிடம் கற்றல் வளங்களின் வரிசையொன்றுள்ளது.

இணையத்திலுள்ள எமது வளங்களானவை, நிகழ்படங்கள் (videos), செய்கைத் தாள்கள் (worksheets), செயற்பாட்டுத் தூண்டல்கள் (activity prompts), பயிற்சிப்புத்தகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இவை எமது கண்காட்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் காட்சிப்படுத்தப்பட்ட கலைப் படைப்புக்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். அழைக்கப்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், பயிற்றுநர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட சிறப்பு செயற்பாடுகளின் வரிசையொன்றையும் இவ் வளங்கள் உள்ளடக்குகின்றன.

பயிற்றுநர்களுக்கான தொழில்நெறி மேம்பாடு

இலங்கையின் நவீன மற்றும் சமகால கலைகளை வகுப்பறைகளுக்கு எடுத்துச்செல்லும் வழிமுறைகளூடாக பயிற்றுநர்களை வழிப்படுத்துவதற்காக, கலைஞர்களாலும் பயிற்றுநர்களாலும் எடுத்தாளுநர்களாலும் நடத்தப்படும் ‘தொழில்நெறி மேம்பாட்டு நாட்கள்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் கல்வித்திட்டத்துடன் கலையையும் எண்ணங்களையும் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தும் ஆய்திறன் கொண்ட சிந்தனையை ஊக்கப்படுத்தும் கருவிகளை பயிற்றுநர்களுக்கு அறிமுகப்படுத்துவனவாக இப் பன்முக நிகழ்ச்சித்திட்டங்கள் அமைகின்றன. எல்லாத் துறைகளையும் சேர்ந்த பயிற்றுநர்களையும் இதிலே பங்குபற்ற நாம் ஊக்குவிக்கிறோம்.

பாடத் திட்டங்கள்

இலங்கையின் நவீன மற்றும் சமகால கலையினை வகுப்பறைகளுடன் ஒருங்கிணைப்பதற்காக எமது இலவச பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கேள்வியெழுப்புதல், பரிசோதனை செயற்பாடுகள், கடுமையான விவாதங்கள் ஊடான கற்றலை ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு பாடத்திட்டத்தையும் அருங்காட்சியக பயிற்றுநர்கள் மேம்படுத்தலாம். கலை, பண்பாடு, சமகால நடப்புக்கள் பற்றிய அறிவுபெற்ற ஆய்திறன் கொண்ட புரிதலை இப்பாடங்கள் வளர்த்தெடுக்கும்.

இளம் மாணவர்கள்

இளம் மாணவர்களுக்கும் முன்பள்ளி மாணவர்களுக்கும் தரம் 1-5 வரையான மாணவர்களுக்குமென வடிவமைக்கப்பட்ட செயற்பாடுகளைப் பெற்றுக்கொள்ள, எமது “வயதுக்குரிய நிகழ்நிலை பயிற்சித் தாள்களும் நிகழ்படங்களும்” பகுதியினை பார்வையிடவும்

பயிற்றுநர் வழிகாட்டிகளும் பாடத்திட்ட மதிப்பீடும்

இலங்கையின் நவீன மற்றும் சமகால கலைகளோடு தொடர்பு பட்ட விடயங்களை எவ்வளவு தூரம் எமது உள்நாட்டு பாடசாலை கல்வித்திட்டம் உள்வாங்கியிருக்கிறது என்பதைமதிப்பாய்வு செய்வதற்கான பயிற்றுநர் வழிகாட்டிகள் தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களை இலக்காகக் கொண்டது. இவற்றை ஏனைய வயதுகளுக்கும் தரங்களுக்கும் இயல்திறன்களுக்கும் புவிசார் பண்பாடுகளுக்கும் மொழியியல் குறிப்புக்களுக்கும் ஏற்றபடி பொருத்திக்கொள்ளலாம்.

கல்வித்திட்ட மதிப்பீடு, பயிற்றுநர் வழிகாட்டி ஆகியவை பற்றி அருங்காட்சியகத்தான் நடத்தப்படும் குழுநிலை உரையாடல்களில் பங்கெடுக்க விரும்பினால் உங்களை பதிவு செய்துகொள்ளவும்.

எமது கற்றல் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு ruhanie@mmca-srilanka.org எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்.

காணொலி

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்

தினால் சஜீவ உடன்

Learn More

Artist Tour

Learn More

கேலரி உரையாடல்

இருஷி தென்னக்கோன், அனோமா ராஜகருணா, மற்றும் ஷானி ஜயவர்தன உடன் ‘ஆவணப்படம் தயாரிக்கும் கலை?’

Learn More

Exhibition Tour

Learn More

சிறுவர்களுக்கான பயிற்சித்தாள்கள்

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்

தினால் சஜீவ உடன்

Learn More

Artist Tour

Learn More

கேலரி உரையாடல்

இருஷி தென்னக்கோன், அனோமா ராஜகருணா, மற்றும் ஷானி ஜயவர்தன உடன் ‘ஆவணப்படம் தயாரிக்கும் கலை?’

Learn More

Exhibition Tour

Learn More

எமக்கு உதவுக

நவீன மற்றும் சமகால கலைகளுக்கான இலங்கையின் முதல் அருங்காட்சியகத்தினை உருவாக்க எம்முடன் இணையுங்கள்

உறுப்பினராக இணைவதன் மூலமோ அல்லது எமதுசெயற்பாடுகளுக்கு நன்கொடை அளிப்பதன் மூலமோ இம்முயற்சியில் ஈடுபட உங்களை அழைக்கிறது நவீன மற்றும் சமகால கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகம்

எம்முடன் இணைக