Archives: Exhibitions

அந்நியர்

‘அந்நியர்’ எனும் சொல்லானது பொதுவாக வேற்று நாட்டவரை குறிக்கும். ஆனால் அதே வேளை, வேறு அடையாளம், பிற மொழி பேசுபவர் அல்லது பிற சமூகத்தை சேர்ந்தவரையும் நாம் அந்நியராக கருதுகின்றோமா? மேலும், பல அடையாளங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களைத் தழுவிக்கொண்டு, குறிப்பிட்ட ஒன்றிற்கு மட்டும் உரித்தானவராக அடையாளப்படுத்தப்படாத ஒருவரும் அந்நியர் எனக் கருதப்படுவாரா? ‘அந்நியர்’ கண்காட்சியில், 15 சமகால கலைஞர்கள் தம்மில் அந்நியத்தன்மை பொறிக்கப்படும் சிக்கலான வழிமுறைகளையும், அதனால் தாம் வேற்று நபர்கள், வெளியாட்கள் அல்லது தவறு [...]
Read Full Article

சந்திப்புகள்

ஒரு விடயத்திற்கும் இன்னொரு விடயத்திற்குமிடையேயான தற்செயலான சந்திப்பு, எமக்குப் பரீட்சயமான அல்லது பொதுவான ஒன்றை நாம் பார்க்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதா? அருகருகே வைக்கப்பட்ட இரண்டு கலைப்படைப்புகள், அவற்றைப் பற்றி புதிய விடயங்களை வெளிப்படுத்துமா? இந்தக் கண்காட்சியானது, தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் காட்சிகளின் கோர்வையாக, 1950 காலப்பகுதி தொடக்கம் தற்போது வரையான ஆறு படைப்புகளின் சந்திப்புகளை வெளிப்படுத்துகின்றது. ஜோன் கீல்ஸ் நிறுவனம் மற்றும் ஜோர்ஜ் கீற் ஸ்தாபகத்தின் சேகரிப்புகளிலிருந்து வரையப்பட்ட, குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஓவியத்தை சூழ்ந்தும் அதற்குப் [...]
Read Full Article